ஒருமுறை மட்டும் பயன்படுத்தி வீசப்படும் மின் சிகரெட்டுகளைத் தடை செய்ய பிரான்ஸ் திட்டம்

பாரிஸ்:

ருமுறை பயன்படுத்தி விட்டுத் தூக்கி வீசப்படும் மின் சிகரெட்டுகளைத் தடை செய்ய பிரான்ஸ் திட்டமிடுகிறது.

“இது ஒரு முக்கியமான ஒரு பொதுச் சுகாதாரப் பிரச்சினை” என்ற, பிரெஞ்சுப் பிரதமர் எலிசபெத் போர்ன் (Elisabeth Borne) வானொலி நிகழ்ச்சியொன்றில் அறிவித்தார்.

பிரான்ஸில் ஆண்டுதோறும் பதிவாகும் மரணங்களில் 75,000 மரணங்கள் புகையிலைப் பயன்பாட்டினால் ஏற்படுவதாகவும், இதனை சரிசெய்வதற்கு ஒரு முயற்சியாக தேசிய அளவில் இந்த ஒருமுறை பயன்படுத்தும் மின் சிகரெட்டுகளை தடை செய்யும் முயற்சியை மேற்கொள்ள அரசாங்கம் உத்தேசித்துள்ளதாய் அவர் கூறினார்.

“puff” என்றழைக்கப்படும் ஒருமுறை பயன்படுத்தி விட்டு வீசப்படும் புதுவகை மின் சிகரெட்டுகளைப் பயன்படுத்தும் இளையர்கள் நாளடைவில் புகையிலைப் பழக்கத்துக்கு அடிமையாக வாய்ப்பிருப்பதைத் போர்ன் சுட்டிக்காட்டினார்.

எனினும், புகையிலைக்கான வரி இந்த ஆண்டுதான் (2023) உயர்த்தப்பட்டிருப்பதால் அடுத்த ஆண்டு (2024) அதனை அதிகரிக்கும் எண்ணம் அரசாங்கத்துக்கு இல்லை என்றார் அவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here