இந்தோனேசிய தூதர் தொற்றுக்குப் பலி

சோகத்தில் இந்தோ தூதரகம்

உயர் பதவி , நல்ல மனிதர்கள் என்ற பாகுபாடு இல்லாமல் கொரோனாவின் கோரத்தாண்டவத்தால் உலக நாடுகள் கதி கலங்கிக்கொண்டிருக்கின்றன. இத்தொற்றுக் கிருமிகள்  சீனாவின் வூஹான் என்ற இடத்தில் தயார் செய்யப்பட்டவை என்று ஒரு குழு ஆணித்தரமாக நம்புகிறது. 
இக்கூற்றில் உண்மை இல்லை என்று சீனா அடித்துக்கூறுகிறது. ஆனால், சீனா உண்மையை மூடி மறைக்கிறது என்று உலக நாடுகள், குறிப்பாக அமெரிக்கா குற்றம் சாட்டுகிறது. மேலும் பல நாடுகள் சீனாவின் திருகு தாளத்தை  எரிச்சலோடு பார்க்கின்றன.
சீனாவின் நோக்கம் என்ன? இந்தியாவை ஒழித்துக்கட்டுவதுதான் என்று பல நாடுகள் பல ஆதாரங்களைக் கூறியும் இந்தியா மட்டும் இன்னும் அமைதியாகவே சீனாவுடன் நட்பு பாராட்டி வருகிறது.
தொற்று நோயை பரப்பிவிட்ட சீனாவில் இப்போது கொரோனா அடிமட்டமாகக் குறைந்துவிட்டது மட்டும் எப்படி? என்றும் கேள்விகல் எழுகின்றன! ஆனால் பூசி மெழுகுவதில் சீனாவுக்கு நிகர் யாருமில்லையே!
சீனா திட்டமிட்டே நடத்தும் பயோ யுத்தம் இது என்பது பட்டவர்த்தனமாகத்தெரிய வந்திருகிறது. 
பிற நாடுகளை ஒழித்துக்கட்ட ஆயுதங்கள் பயன்படாது என்று உணர்ந்த சீனா இப்போது ரசாயனப் போர்வையில் நரித்தனம் செய்கிறது. இதனால் சீனாவுடனான நட்பை தள்ளிவைக்கும்படி பல தரப்புகள் இந்தியாவுக்கு ஆலோசனை கூறியும் இந்தியா மெளனம் களையவில்லை . 
இந்தியாவில் உருமாறிய தொற்றின் மூன்றாம் அலை மோசமாகிக்கொண்டிருக்கிறது. மக்கள் அலைமோதிக்கொண்டிருக்க சீனா சினிமா ரசித்துக்கொண்டிருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here