சுகாதார ,மருத்துவ துறைசார்ந்த தன்னார்வலர்கள் சேவை அரசிற்கு தேவை; டான் ஸ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா அழைப்பு

பெட்டாலிங் ஜெயா: கோவிட் -19 தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கு சுகாதார ,மருத்துவ துறைசார்ந்த தன்னார்வலர்கள் தங்கள் சேவைகளை முன்வந்து அரசிற்கு உதவுமாறு சுகாதாரத்துறை அமைச்சர் டான் ஸ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா அழைப்பு விடுத்துள்ளார்.

நாடு முழுவதும் உள்ள அரசு சுகாதாரப் பணியாளர்கள் எதிர்கொள்ளும் சுமையைத் தணிக்க இந்த தன்னார்வலர்களின் சேவை மிகவும் அவசியம் என்றார்.

மருத்துவ அதிகாரிகள், பல் அதிகாரிகள், உதவி மருத்துவ அதிகாரிகள், செவிலியர்கள், சுற்றுச்சூழல் சுகாதார அதிகாரிகள், உதவி சுற்றுச்சூழல் சுகாதார அதிகாரிகள் மற்றும் ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர்கள் தேவை என்று வியாழக்கிழமை (மே 27) தனது ட்விட்டரில் அவர் இவ் அழைப்பை வெளியிட்டார்.

“இந்த தன்னார்வலர்கள் 18 முதல் 60 வயதுக்குட்பட்டவர்கலாகவும் உடல், மன ரீதியாக ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

கர்ப்பிணி பெண்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் வேலை செய்ய விரும்பும் தன்னார்வலர்கள் முதலில் தங்கள் முதலாளிகளிடமிருந்து ஒப்புதல் பெற வேண்டும் என்று அவர் கூறினார்.

அவர்கள் சுகாதார அமைச்சின் கீழ் பணியாளர்களாக மட்டுமன்றி தேவையான இடங்களில் பணியாற்ற தயாராக இருக்க வேண்டும், அத்துடன் கடந்த 14 நாட்களில் கோவிட் -19 சம்மந்தமான அல்லது வழக்குகளுடன் நெருங்கிய தொடர்புகளும் இருந்திருக்கக்கூடாது என்றும் கூறினார்.

இத் தன்னார்வத் திட்டத்தின் கீழ், சுகாதார அமைச்சகம் எந்தவொரு போக்குவரத்து, உறைவிடம், உணவு அல்லது கொடுப்பனவுகளையும் வழங்காது என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் “தன்னார்வலர்கள் தங்களது அனைத்து செலவுகளையும் அவர்களே ஏற்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here