​ செலாயாங் மருத்துவமனையிலும் கொள்கலனை சவக்கிடங்காகப் பயன்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது

பெட்டாலிங் ஜெயா: கோவிட் தொற்றினால் இறந்தவர்களின் உடல்களை சேமித்து வைக்க  சிறப்பு கொள்கலன் திட்டத்தை சுங்கை பூலோ மருத்துவமனை ஆரம்பித்த 11 நாட்களுக்குப் பிறகு, அதே போன்ற சிறப்பு கொள்கலனை பயன்படுத்தும் இரண்டாவது அரசு மருத்துவமனையாக   செலாயாங் உருவாகி இருக்கிறது.

சவக்கிடங்கு நிரம்பியதால் கூடுதலாக 20 உடல்களை வைக்க மருத்துவமனையின் தடயவியல் பிரிவு இந்த கொள்கலன் தயாரித்ததாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் அதிகமான கோவிட் -19 இறப்புகள் தினசரி, குறிப்பாக கிள்ளான் பள்ளத்தாக்கில் பதிவாகின்றன என்று அது ஒரு பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளது. நேற்று ஐம்பத்தி ஒன்பது இறப்புகள் பதிவாகியுள்ளன, மொத்த இறப்பு எண்ணிக்கை 2,492 ஆக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here