2 வார எம்சிஓ; ஆவணமற்ற புலம்பெயர்ந்தோர் மீதான நடவடிக்கை தொடரும்

பெட்டாலிங் ஜெயா: முழு எம்சிஓ அமல்படுத்தப்படும் இரண்டு வார காலகட்டத்தில் ஆவணமற்ற புலம்பெயர்ந்தோர் தடுத்து வைக்கும்  நடவடிக்கைகளை  குடிநுழைவுத் துறை (JIM) மேற்கொள்ளும் என்று உள்துறை அமைச்சர் ஹம்சா ஜைனுடின் இன்று தெரிவித்தார்.

ஒரு செய்தியாளர் கூட்டத்தில், JIM இந்த நடவடிக்கைகளை தேசிய பதிவுத் துறை (NRD) மற்றும் காவல்துறையினருடன் நடத்தவுள்ளது என்றும், கைது செய்யப்படக்கூடியவர்களுக்கு கூடுதல் தடுப்பு மையங்களை ஒதுக்க சிறைத் துறை தயாராக உள்ளது என்றும் கூறினார்.

“கடந்த முறை எங்கள் சிறைச்சாலைகள் அதன் திறனைத் தாண்டியது என்பது உண்மைதான். ஆனால் இப்போது நாங்கள் தயாராக இருக்கிறோம். எங்களிடம் சேட்லைட் சிறைகள் மற்றும் தடுப்பு மையங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here