ஒன்றிணைந்து சீனாவின் நட்பை ஒதுக்க வேண்டும்

 – ஆஸ்திரேலிய முன்னாள் பிரதமர் கெவின் ரட் கூறுகிறார்

கொரோனா விவகாரத்தில் சீனாவின் இரட்டைவேடம் பற்றி உலக நாடுகள் மிக நன்றாகவே அறிந்து வைத்திருக்கின்றன.  ஆனாலும் முழுமையான ஆதாரமின்றி ஏதும் செய்ய இயலாமல் பல நாடுகள் ஸ்தம்பித்துக் கிடக்கின்றன.
சீனாதான் காரணம்,  குற்றவாளி என்று தெரிந்தும் நெருங்க முடியவில்லை . இதுதான் இன்றைய கொரோனாநிலை. 
சீனாதான் கொரொனா கொடுமைக்குக் காரணம் என்று பல உலகத்தலைவர்கள் பூடகமாகக் கூறியும் வருகின்றனர். அது உண்மைதான் என்பதில் ஐயம் இல்லாமல் போனாலும் பூனைக்கு மணி கட்டுவது யார் என்ற கேள்வியும் எழாமல் இல்லை. ஆனாலும் ஆஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் கெவின் ரட்  வாய் திறந்திருப்பதைக் குறிப்பிடாமல் இருக்க முடியாது.
காற்று நிரப்பப்பட்ட பலூன் வெடித்தததுபோல் பொங்கியிருக்கிறார் இவர். காரணம் என்ன? உலகம் அறிந்ததுதான். உலகமே ஒட்டுமொத்தமாய் வீழ்ந்து ,சரிந்து வருகிறதென்றால் சீனாவின்  கொடுமைச்செயலே முழுக்காரணம் என்பதுதான்.   அனைத்து நாடுகளும்  அல்லலில் வீழ்ந்து கிடக்கு காரணம்தான்.
சீனாவில் உற்பத்தி செய்யப்பட்ட கொரோனா கிருமி சீனாவில் இல்லை. வந்தது போல் சீன் காட்டிவிட்டு, கட்டுப்பாட்டிற்குள் வைக்கப்பட்டதாக  நாட்கம் நடதியிருக்கும் செயல் அறிந்ததுதானே! 
ஆக்கலும் அழித்தலும் அங்கே தீர்மானிக்கப்பட்டிருக்கிறது என்றுதானே பொருள் . பிள்ளையைக் கிள்ளிவிட்டு எங்கள் பிள்ளையும் அழுகிறது என்கிறார்கள்! 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here