
உருமாறிய கொரோனா வைரஸ்களுக்கு கிரேக்க எழுத்துக்களை பெயர்களாக அறிவித்துள்ளது உலக சுகாதார அமைப்பு. கண்டறியப்பட்ட நாட்டின் பெயரை சூட்டுவதற்கு எதிர்ப்பு எழுந்த நிலையில் கிரேக்க எழுத்துக்கள் சூட்டப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸின் பெயர்:
கால நிலைக்கு ஏற்ப வைரஸ் பரவுவதால், உலக மக்கள் அதன் பெயர் கொண்டு அடையாளம் கண்டு கொள்கின்றனர். செய்திகளிலும் வைரசின் பெயர் கொண்டு தகவல்கள் வருவதால் நமக்கு அது புரிகின்றது. ஒரு வைரசின் தன்மையைப் பொருத்தும், அதன் வளர்ச்சியை ஆராய்ந்த பின்னர் அதற்கான பெயர் வைக்கப்படுகிறது.
கொரோனா என்ற சொல் லத்தீன் மொழி சொல்லலாகும். இதற்கு மலர் மகுடம் என்று அர்த்தம். சீனாவில் 2019ஆம் ஆண்டில் பரவிய புதிய வைரஸ், கொரோனாவின் 7வது இனமாகும். இந்த வைரஸ் முந்தைய கொரோனா வைரஸ்களை விடவும் அபாயகரமாகதாக உள்ளது. இது தற்போது உருமாறி அதிக வீரியத்துடன் பரவி வருகிறது.
அதற்கு உலக சுகாதார அமைப்பு பெயர்கள் சூட்டியுள்ளது. இந்தியாவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வகைக்கு டெல்டா எனப் பெயரிடப்பட்டுள்ளது. மற்றொரு உருமாறிய கொரோனாவுக்கு ‘காப்பா’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனாவுக்கு ஆல்ஃபா என்றும், தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்டதற்கு பீட்டா என்றும், பிரேசிலில் முதன்முதலில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனாவுக்கு காமா என பெயரிடப்பட்டுள்ளது. அமெரிக்காவில் கண்டறியப்பட்ட வகைக்கு எப்சிலான் என்றும் பெயர் வைக்கப்பட்டுள்ளது.