பார்வதி உருவில் தடுக்கும் ஆயுதம்

 சோகத்தில்  வைரமுத்து

ஆறுதல் சொல்லும் பாரதிராஜா!!

நடிகை பார்வதி தனது ட்விட்டர் பக்கத்தில்…”ஓஎன்வி ஐயா நமது பெருமை. ஒரு கவியாகவும், பாடலாசிரியராகவும் அவரது பங்களிப்பு ஒப்பிட முடியாதது: நம் கலாசாரத்தை செழுமைப்படுத்தியது. அவரது பணியால் நமது இதயங்களும், மனங்களும் பயனடைந்துள்ளன. பாலியல் வன்முறை குற்றச்சாட்டுக்கு உள்ளானவருக்கு அவர் பெயரில் விருதளித்து கௌரவிப்பது அவருக்கு அவமரியாதை செய்வதாகும்” என நடிகை பார்வதி சமூகவலைத்தளத்தில் குண்டைத்தூக்கிப்போட்டதன் விளைவால் , விருது வழங்கும் கொடுக்க விருந்த விருதினை திரும்ப பெறுவதாக அறிவித்தது.

இது சம்பந்தமாக வைரமுத்துவின் நண்பர், இயக்குனர் பாரதிராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில், என் படைப்புகளில் முன் கதை, பின் கதை, கதாபாத்திரங்களின் உணர்வுகளை பாடல்களில் வார்த்தைகளை அடக்கி ஆளத்தெரிந்த ஒரு கவிஞனை தேடி அலைந்து கொண்டிருந்த நேரத்தைப் பற்றிக் குறிப்பிடுகிறார்.

சங்கம் வளர்த்த நம் முன்னோர்களின் வழித் தோன்றல்களாக மெய்ஞானம் அறிந்த விஞ்ஞானக் கவிஞனை கண்டெடுத்து ஒரு பொன் மாலைப் பொழுதில் விதைத்தோம்..

வார்த்தை கவிதை வரிகள் காவியம்.. வியப்பு..! இரண்டு வரிகளின் இடைவெளி கதை சொல்கிறது..

வார்த்தை புதிது வரிகள் புதிது என் தாய் மொழி புதிதாக உணர்ந்தேன்..

அரை நூற்றாண்டு அருகில் நிற்கிறோம், என் கவிஞனை திரும்பிப் பார்க்கிறேன்.

வில்லோடு வா நிலவே, கருவாச்சி காவியம், கள்ளிக்காட்டு இதிகாசம், தண்ணீர் தேசம் மூன்றாம் உலகப் போர்.., பத்மஸ்ரீ, பத்மபூசன், சாகித்ய அகாதமி, ஏழு தேசிய விருது எண்ணற்ற படைப்புகள், எண்ணற்ற விருதுகள்.. விருட்சமாய் என் தமிழ் உயர்ந்து நிற்கிறது. கர்வம் கொள்கிறேன்.

கேரளச் சகோதரர்களின் பேரன்பினால்.. மலையாள இலக்கியத்தின் உயரிய விருதான ஓ.என்.வி. விருது எங்கள் கவிப்பேரரசுக்கு  அறிவித்தது அறிந்து மகிழ்வுற்றேன்.. ஆனால், அரசியல் நெருக்கடியால் மறுபரிசீலனை என தற்போது செய்திகள் வந்திருப்பதை கண்டு வருத்தம் சிறிதளவும் இல்லை.

சமீபகாலமாக எம் இனத்தின் மீதும் மொழி மீதும் அரசியல் காழ்புணர்ச்சி கொண்டு எங்கிருந்தோ , தனிமனித மாண்பிற்கு களங்கத்தை ஏற்படுத்தும் விதமாக சில நபர்களைக் கொண்டு மதம், இனம் , மொழியாக பிரிவினை ஏற்படுத்தும் விதமாக அறிவிக்கப் பட இயலாத போரினை தொடுத்துக் கொண்டு இருக்கிறார்கள். தமிழர்களாகிய நாம் ஒற்றுமையுடன் இருந்து முறியடிக்கவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

உலகத்தமிழர்களின் நெஞ்சங்களில் கவிப்பேரரசு என்கிற பட்டம் சூட்டி கம்பீரமாக நிற்கும் கவிஞனே உன்னை அசைத்துப் பார்த்துவிடலாம் என்பது வெறும் கனவாகவே இருக்கும். தமிழர்களுக்கு என்றும் உறுதுணையாக மாண்புமிகு தமிழக முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர்,  அரசியல் கட்சித் தலைவர்கள் உறுதுணையாக இருக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

‘இந்த குளத்தில் கல்லெறிந்தவர்கள்” எறியட்டும்…. அவர்களின் தாகம் தீரட்டும்… குளம் என்பது கானல் நீர், நீ சமுத்திரம் என்று குறிப்பிட்டுள்ளார் அவரின் சினிமா பாணியில்.

ஆனால் பார்வதி கூற்றில் உண்மையின் பலம் எத்தனை விழுக்காடு என்று தெரிய வேண்டுமே!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here