காலடி பட்டால்தான் கொரோனா விலகுமாம்!

-நக்கல் (பண்ணுகிறார் ) நித்யானந்தா!

-உலகின் தலை சிறந்த நகைச்சுவை!

பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய சாமியார் நித்யானந்தா தற்போது எங்கு இருக்கிறார் என்பது தெரிந்தும் தெரியவில்லை. அவரை பிடிக்க நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தும் பிடிக்க வழியில்லை. அதனை கையில் வைத்துக்கொண்டு போலீசார் தேடி வருகின்றனர். அதாவது, திருவண்ணாமலையை சேர்ந்த நித்யானந்தா பெங்களூரில் ஆசிரமம் நடத்தி புகழ் பெற்றார். பின்னர் நித்யானந்தாவுடன் நடிகை ரஞ்சிதா ஒன்றாக இருப்பது போன்ற வீடியோ சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அது முதல் மிகவும் பிரபலமானார் நித்தியானந்தா.

இதன் தொடர்ச்சியாக நித்யானந்தா மீது பல்வேறு குற்றச்சாட்டுகளும் கூறப்பட்டன. அவருடன் இருந்தவர்கள் வெளியேறி பாலியல் குற்றச்சாட்டை கூறினர். மேலும் சிறுமிகளும் அவரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக புகார் எழுந்தது.

இந்த வழக்கில் தான் அவர் கைது நடவடிக்கையில் இருந்து தப்பித்து தலைமறைவாக இருந்து வருகிறார். எனினும் அவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கைலாசா நாட்டை தான் உருவாக்கி இருப்பதாக அதிரடியான அறிவிப்பை வெளியிட்டார். அந்த நாட்டிற்கு தானே அதிபர் என்றும் அதிரடியாக அறிவித்துக்கொண்டார்.

ஆனால், இந்த கைலாசா நாடு எங்கு இருக்கிறது? என்பது இன்னும் தெரியவில்லை. ஆனால் அங்கிருந்து பேசுவது போன்று நித்யானந்தா அடிக்கடி வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். நேற்று வெளியிட்ட வீடியோவில், கைலாசா நாட்டின் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக நித்யானந்தா பரபரப்பு தகவலை வெளியிட்டிருந்தார்.

இந்தநிலையில், என் காலடி இந்தியாவில் பட்டால் தான் நாட்டை விட்டு கொரோனா போகும் என்று நித்யானந்தா தெரிவித்துள்ளார்.

கொரோனா எனும் கிருமி நாட்டிற்குள் நுழைய தன்னை ஊரை விட்டு விரட்டியதே காரணம் என்றும் அவர் பேசியுள்ளார். கொரோனா என்னும் கிருமி இந்தியாவிற்குள் வரக்கூடாது என்பதற்காக 2020 இல் பாரதம் முழுவதும் பன்னிரு ஜோதிர் லிங்கம் பாதயாத்திரையை செய்திடவே என்மகன் மூலமாய் திட்டமிட்டிருந்தேன். படுபாவிகள் என்னை நாட்டை விட்டே துரத்தினார்கள். இப்போது என்ன நடக்கிறது என்று பார் என அந்த வீடியோவில் அவர் பேசியுள்ளார்.

மேலும், முறையாக கைலாய நாட்டின் தலைவனாக என்னை மரியாதையோடு நல்மதிப்போடு நித்தியானந்தன் திருவடி மீண்டும் பாரதத்தில் பாதயாத்திரை செய்தபிறகு மட்டுமே கொரோனா இந்தியாவை விட்டு செல்லும் என்று நித்யானந்தா  உலகின் முதல் தர நக்கல் செய்தியில் கூறியிருக்கிறார்.

எனவே, இன்றுமுதல் அவர் நக்கல் நித்தி என்று அழைக்கப் படுவாராக!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here