மாலை 6 மணி மேல் ஊரடங்கா? போலியான காணொளி என்று போலீஸ் விளக்கம்

கோலாலம்பூர்: உடல்நலம் அல்லது அவசர காரணங்களைத் தவிர்த்து மாலை 6 மணிக்குப் பிறகு   வெளியில் செல்லும் யாரையும் தடுத்து வைக்க காவல்துறைக்கு உத்தரவு இருப்பதாக போலியான வீடியோ ஒன்று பரப்பப்பட்டதாக மாநகர போலீசார் இன்று உறுதிப்படுத்தியுள்ளனர்.

கோலாலம்பூர் துணை காவல்துறைத் தலைவர் யோங் லீ சூ, கடந்த மார்ச் மாதம் ஒரு இணையதளத்தில் வெளியிடப்பட்ட ஒரு கட்டுரையின் மாற்றியமைக்கப்பட்ட ஸ்கிரீன் ஷாட்டை இந்த வீடியோவில் வைத்திருப்பதாக விசாரணைகள் தெரிவிக்கின்றன.

கட்டுரையின் ஸ்கிரீன் ஷாட் பொறுப்பற்ற தரப்பினரால் PDRM logo, the words ‘Diraja Malaysian IPK KL Polis’ என்று பொறிக்கப்பட்ட அந்த வாசகமும்  மற்றும் இன்று தொடங்கி, மாலை 6 மணிக்குப் பிறகு யார் வீடுகளை விட்டு வெளியேறினாலும் அவர்கள் தடுத்து வைக்கப்படுவார்கள் என்று குறிப்பிடப்பட்ட ஆடியோ பதிவில் எந்த உண்மையும் இல்லை என்று அவர் தெரிவித்தார்.

இயக்கம் கட்டுப்பாட்டு உத்தரவின் படி இரவு 8 மணி வரை கடைகள் திறந்திருக்கும் போது, ​​தேவைகள் மற்றும் உணவு வாங்க பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேற அனுமதிக்கப்படுவதாக யோங் கூறினார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here