கோலாலம்பூர்:
இலக்கிடப்பட்ட `ரோன்95’ (RON95) பெட்ரோலின் மானிய விலை, மலேசியர்களுக்கு ஒரு லிட்டருக்கு, RM1.99காசாக, செப்டம்பர் 30-ஆம் தேதி முதல் விற்கப்படும் என்று, இரண்டாம் நிதியமைச்சர், டத்தோஸ்ரீ அமீர் ஹம்சா அஸிஸான் அறிவித்தார்.
இதன் மூலம், உலகின், மிகக் குறைந்த, பெட்ரோல், விலைகளில், ஒன்றாக, மலேசிய, பெட்ரோலின் விலை நீடிக்கிறது.
சந்தை, ஏற்ற இறக்கங்கள் எதுவாக இருந்தாலும் இலக்கிடப்பட்ட ரோன் 95 பெட்ரோலின் விலையில் மாற்றம் இருக்காது.
இந்த நடவடிக்கை கசிவுகள், தவறான வெளிநாட்டுத் பயன்பாடுகள் ஆகியவற்றை தடுக்க, உதவும் என்று அவர் மேலும் கூறினார்.
இதன் வாயிலாக, அரசாங்கத்திற்கு, ஆண்டுக்கு, RM2.5 முதல் RM4 பில்லியன் ரிங்கிட் வரை சேமிப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த, சேமிப்பு `சும்பங்கான் துனாய் ரஹ்மா’ (Sumbangan Tunai Rahmah) போன்ற, திட்டங்களுக்கு, பயன்படுத்தப்படும்.
இதனிடையே, Kampung Angkat Madani திட்டத்தின் ஒரு பகுதியாக, புலாவ் பெத்தோங்கிற்கு’ பயணம் மேற்கொண்டிருந்த போது, அமீர் ஹம்சா, இத்திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள 200 Kampung Angkat Madani க்கு அரசாங்கம் RM200 மில்லியன் ரிங்கிட்டை ஒதுக்கி உள்ளது என தெரிவித்தார்.
அதுமட்டுமின்றி,இந்த மீன்பிடி கிராமத்தை, ஒரு சுற்றுலாத் தலமாக, மேம்படுத்துவதற்கு, அரசாங்கம் இதற்கென RM1 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கியுள்ளது எனவும் அவர் கூறினார்.
இதன் வாயிலாக உள்ளூர் வணிகங்களும் பொருளாதாரமும் வளர்ச்சி அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.





















