நடமாட்ட கட்டுப்பாட்டிலிருந்து வெளிவருகிறது மெல்போர்ன் நகரம்

Melbourne's skyline at dusk.

சிட்னி: ஆஸ்திரேலியாவின் இரண்டாவது பெரிய நகரமான மெல்போர்ன் நாளை (ஜூன் 11) திட்டமிட்டபடி கோவிட் -19 காரணமாக நாட்டில் அமலில் இருந்த கடுமையாக்கப்பட்ட நடமாட்டக்கட்டுப்பாட்டில் இருந்து வெளியேறுகின்றது என்று விக்டோரியா மாநில அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆஸ்திரேலிய நேரப்படி இன்று இரவு (ஜூன் 10) 11.59 க்கு நடமாட்ட கட்டுப்பாட்டில் இருந்து வெளியேறுகின்றது. இருப்பினும் மக்கள் தங்களது வீடுகளிலிருந்து 25 கிலோ மீட்டர் தூரத்திற்க்குள்ளேயெ இருக்க வேண்டும் என்றும் முகக்கவசம் அணிவது அவசியம் என்பதுடன் பயணம் மற்றும் கூட்டங்களுக்கு (10 பேர் மட்டும்) சில கட்டுப்பாடுகள் இன்னும் ஒரு சில வாரத்திற்கு இருக்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் நடமாட்ட கட்டுப்பாட்டில் இருந்து விடுபடும் அந்த நாள் மிகவும் நல்ல நாள் என்று விக்டோரியா மாநில நடப்பு பிரதமர் ஜேம்ஸ் மெர்லினோ புதன்கிழமை மெல்போர்னில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.

“ஆனால் இது இன்னும் முடிவடையவில்லை என்பது எங்களுக்குத் தெரியும், விக்டோரியா மற்றும் நாடு முழுவதும் பரவலாக தடுப்பூசி போடும் வரை, வைரஸ் இன்னும் நம்முடன் இருக்கும்” என்றும் மெர்லினோ கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here