பிரபல சீரியல் நடிகையின் மகன் கொரோனா தொற்றால் பலி!

பிரபல சீரியல் நடிகை கவிதாவின் மகன் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார்.

ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் என்றென்றும் புன்னகை சீரியலில் நடிகை கவிதா முக்கிய ரோலில் நடித்து வருகிறார். இவர் திரைப்படங்களிலும் அம்மா கேரக்டரில் நடித்து புகழ்பெற்றவர். பல்வேறு சீரியல்களும் நடித்துள்ளார்.

ஆந்திராவை சேர்ந்த இவர் அங்கு அரசியலிலும் பிரபலமானவர். கொரோனா பரவலின்போது அவர் நடிப்பு, அரசியல் என அனைத்திலும் இருந்து விலகி இருந்தார். இந்நிலையில் தான் அவரது மகன் , கணவருக்கு சமீபத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டது.

கவிதாவின் மகன் சாய் ரூப்-க்கு கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. அதனால் அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

கவிதாவின் கணவர் தற்போது சிகிச்சையில் தான் இருக்கிறார். கொரோனாவுக்கு மகனை பறிகொடுத்த கவிதாவுக்கு சினிமா துறையினr,  சின்னத்திரை பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here