கொரோனாவினால் மற்றொரு பிரபல நடிகர் பலி

தமிழகத்தில் கொரோனா 2-ஆம் அலை தீவிரமாக பரவி வருகிறது. பல்வேறு திரையுலக பிரபலங்களும் இதனால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதன் காரணமாக பல முக்கிய பிரபலங்கள் உயிரிழந்து வருகின்றனர். குறிப்பாக சினிமா துறையில் பலர் கொரோனா காரணமாகவும், மாரடைப்பு காரணமாகவும் மரணித்து வருவது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோலிவுட்டைப் பொறுத்தவரை காமெடி நடிகர்களான விவேக், மாறன், நெல்லை சிவா, பவுன்ராஜ், பாண்டு, இயக்குநர்கள் தாமிரா, கே.வி.ஆனந்த் என அடுத்தடுத்த மரணங்கள் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.சின்னத்திரை பொறுத்தவரை தேன்மொழி சீரியல் நடிகர் குட்டி ரமேஷ், பாண்டியன் ஸ்டோர்ஸ் வெங்கடேஷ் ஆகியோர் அடுத்தடுத்து மரணமடைந்தது பெரும் அதிர்ச்சியாக அமைந்தது.

இந்நிலையில், பிரபல நடிகர் கலைமாமணி அமரசிகாமணி அவர்களின் மரண செய்தி வந்துள்ளது.இவருடைய மறைவுக்கு வெள்ளித்திரை, சின்னத்திரை பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நடிகர் மட்டுமல்லாமல் இவர் கவிஞராகவும் அறியப்படுபவர். அவருக்கு வயது 71. மடிப்பாக்கத்தில் உள்ள அவரது இலலத்தில் அவரின் இறுதி மரியாதை நிகழ்வுகள் நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here