பிரதமர் சர்மா ஒலி சர்ச்சை பேச்சு

அதன்படி 7-ஆவது சர்வதேச யோகா தினம் நேற்று உலகமெங்கும் கொண்டாடப்பட்டது. இதையொட்டி மக்கள் வீடுகளில் தனியாகவும், பொது இடங்களில் குழுவாகவும் பல்வேறு ஆசனங்கள் , பிராணாயாம மூச்சுப் பயிற்சிகளில் ஈடுபட்டனர். மலை உச்சிகள் முதல் கடற்கரை வரை, நகர சதுக்கங்கள் முதல் பூங்காக்கள் வரை என உலகம் முழுவதும் நேற்று சிறப்பான யோகா கொண்டாட்டங்கள் நடந்தன.
இந்நிலையில், காத்மாண்டுவில் நேற்று நடந்த சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் நேபாள நாட்டு பிரதமர் கே.பி. சர்மா ஒலி பேசியதாவது:
நம் நாட்டைச் சேர்ந்த முனிவர்கள், யோகிகள் குறித்தும் உலகுக்கு தெரிவிக்கத் தவறிவிட்டோம். நேபாளத்தில் உள்ள அயோத்தியாபுரியில் தான், ராமர் பிறந்தார்.