சென்னை, (ஜூன் 23):
பிரபல திரைப்பட மற்றும் சீரியல் நடிகையுமான பிரியா ராமனுக்கு பலரும் தொடர்ந்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் 1990 காலகட்டத்தில், வெள்ளித் திரையில் கொடி கட்டி பறந்த நடிகைகள் எல்லாம், இப்போது சீரியல் பக்கம் வந்துவிட்டனர்.
அப்படி செம்பருத்தி என்ற சீரியல் மூலம் வந்தவர் தான் நடிகை பிரியா ராமன், இவர் தமிழில் 1993-ஆம் ஆண்டு, இயக்குனர் நட்ராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் தயாரித்த வள்ளி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகம் ஆனார்.
அதன் பின் சில படங்களில் நடித்த இவர், மலையாளம் பக்கம் சென்றுவிட்டார். இருப்பினும், நடிகை பிரியா ராமனும் நடிகர் ரஞ்சித்தும் நேசம் புதிது படத்தில் ஜோடியாக நடித்தனர்.
இருவருக்கும் இடையே காதல் ஏற்பட, கடந்த 1999 ஆம் ஆண்டு பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார்கள். இவர்களுக்கு ஆதித்யா (14), ஆகாஷ் (10) என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.

நன்றாக சென்று கொண்ட இருந்த இவர்கள் வாழ்வில், கருத்து வேறுபாடு ஏற்பட இவர்கள் இருவரும் கடந்த 2014 ஆம் ஆண்டு சட்டரீதியாக விவகாரத்து பெற்றனர்.
இந்நிலையில், இவர்கள் விவாகரத்தாகி ஏழு ஆண்டுகள் ஆன நிலையில், மீண்டும் இவர்கள் ஒன்று சேர முடிவு செய்துள்ளனர்.
அதன் படி இருவரும் ஒன்றாக எடுத்துக் கொண்ட புகைப்படங்களை பிரியா ராமன், மற்றும் ரஞ்சித் தங்களுடைய சமூகவலைத்தள பக்கத்தில் பகிர்ந்திருந்தனர். இதன் பின்னர் சினிமா பிரபலங்கள் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.






















