பல் மருத்துவமனையில் கொள்ளை; 2 ஆடவர்கள் கைது.

கோலாலம்பூர், (ஜூன் 27) :

தாமான் மெலாத்தியில் உள்ள பல் மருத்துவமனையில் கொள்ளையிட்டதாக நம்பப்படும் வழக்கில் நேற்றிரவு, இரண்டு சந்தேக நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

30 மற்றும் 32 வயதுடைய இரு சந்தேக நபர்களும் சம்பவம் நடந்த நான்கு மணி நேரத்திற்குப் பிறகு வங்சா மாஜூவின் அருகே தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக வங்சா மாஜூ மாவட்ட காவல்துறைத் தலைவர் அஷாரி அபு சமா தெரிவித்தார்.

மேலும், இந்த வழக்கில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மேலும் இரண்டு சந்தேக நபர்களை போலீசார் தேடி வருவதாகவும் அவர் கூறினார்.

 இந்த சம்பவத்தில் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் புரோட்டோன் சாகா வகை கார் மற்றும் ஒரு பாராங் கத்தியையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

ஆரம்பகட்ட விசாரணையில் , சந்தேக நபர்கள் இருவருக்கும் குற்றம் மற்றும் போதைப்பொருள் தொடர்பான பல பழைய பதிவுகள் உள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.

“இந்த சம்பவம் தொடர்பாக தகவல் தெரிந்தவர்கள் வங்சா மாஜூ மாவட்ட காவல்துறை அதிகாரியை 03-9289 9222 என்ற தொலைபேசி எண்ணில் அல்லது கோலாலம்பூர் போலீஸ் துரித அழைப்பு எண் 03-2115 9999 வழியோ அல்லது அருகிலுள்ள காவல் நிலையத்திலோ தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இவ்வழக்கு தண்டனைச்சட்டம் 395/397 தந்திரோபாயங்கள் மற்றும் திட்டமிடப்பட்ட செயல் என்ற பிரிவின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகின்றது என்றும் இரண்டு சந்தேக நபர்களும் மேலதிக விசாரணைக்காக ஆறு நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அஷாரி கூறினார்.

மேலும் இச்சம்பவம் தொடர்பான CCTV காட்சிகள் நேற்றிரவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here