ஆடம்பர பங்களா வீட்டில் கஞ்சா செடி வளர்த்து விற்பனை; தந்தை மற்றும் இரு மகன்கள் கைது !

காஜாங், (ஜூன் 28) :

காஜாங்கிலுள்ள ஒரு ஆடம்பர பங்களா வீட்டில் கஞ்சாவை வளர்த்து, விற்பனை செய்ததாக நம்பப்படும் ஒரு தந்தையும் அவரது இரண்டு மகன்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காஜாங் ஓ.சி.பி.டி உதவி கமிஷனர் முகமட் ஜைத் ஹாசான் இச் சம்பவம் பற்றி தெரிவிக்கையில், கடந்த வெள்ளிக்கிழமை (ஜூன் 25) செமினியிலுள்ள குறிப்பிட்ட பங்களா வீட்டை இரவு 10 மணிக்கு சோதனையிட்டதாகவும் அவ்வீட்டில் தந்தை(58) மற்றும் 25 மற்றும் 31 வயதுடைய இரண்டு மகன்களை தாங்கள் கைது செய்த்தாகவும் கூறினார்.

இச் சோதனையின் போது 8 கஞ்சா மரங்களும், கஞ்சாவின் இலை என்று நம்பப்படும் உலர்ந்த இலைகள் கொண்ட 23 போத்தல்களையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளதாகவும் கூறினார். .

மேலும் புற ஊதா விளக்குகள், ஆக்ஸிஜன் தொட்டிகள், குளிரூட்டிகள், பூஸ்டர் விசிறிகள் மற்றும் வெப்ப விளக்குகள் போன்ற தாவரங்களை பயிரிட பயன்படும் உபகரணங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர் என்று இன்று (ஜூன்28) காஜாங் போலீஸ் தலைமையகத்தில்  செய்தியாளர்களிடம் பேசிய ஏ.சி.பி முகமட் ஜைத் தெரிவித்தார்.

சம்மந்தப்பட்டவர்களுடன், சிங்கப்பூரை சேர்ந்த மூன்று ஆடவர்களும் சேர்ந்து அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஒரு வலைத்தளத்திலிருந்து விதைகளை வாங்கி, கிட்டத்தட்ட நான்கு மாதங்கள் செடிகளை பயிரிட்டு இலைகளை ஆன்லைனில் விற்பனை செய்தனர் என்றும் அவர் கூறினார்.

கைப்பற்றப்பட்ட கஞ்சா போதை மருந்துகள் குறைந்தபட்சம் RM19,000 வெள்ளி மதிப்புடையவை என்றும் அவர் கூறினார்.

இதேபோன்ற வழக்குகள் அல்லது குற்றச் செயல்கள் குறித்த தகவல் அறிந்தவர்கள் 03-2052 9999 என்ற எண்ணில் போலீஸ் துரித எண்ணை (hotline) தொடர்பு கொள்ளுமாறும் அல்லது அருகிலுள்ள காவல் நிலையத்தில் தெரிவிக்குமாறும் கேட்டுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here