உணவு போன்ற அடிப்படைத்தேவைக்கு வெள்ளைக் கொடியை உயர்த்துங்கள் என்கிறது ஓர் இயக்கம்; சமூக ஊடகங்களில் வைரல்.

கோலாலம்பூர், ( ஜூன் 29):

நேற்று நாட்டின் பிரதமர் டான் ஸ்ரீ முஹிடின் யாசின் PEMULIH திட்டத்தின் ஒரு பகுதியாக தொடர்ச்சியான உதவிகளை அறிவித்திருந்தார். இந்த திட்டம் நம்மில் பெரும்பாலோருக்கு பயனளிக்கும் என்றாலும், தொற்றுநோயால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள மலேசியர்கள் இன்னும் பலர் உள்ளனர்.

இதைத் தொடர்ந்து, நெட்டிசன்கள் #BenderaPutih (வெள்ளைக் கொடி) என்ற ஹேஷ்டேக்குடன் ஒரு பிரச்சாரம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது.

அதாவது “உங்கள் வீடு அல்லது வாயிலுக்கு வெளியே ஒரு வெள்ளைக் கொடியைத் தொங்கவிடுங்கள். அக் கொடி மற்றவர்களுக்குத் தெரியும் என்பதை உறுதிசெய்து கொள்ளுங்கள்” இக்குறியீடு நீங்கள் அடிப்படை தேவைகள் அல்லது உங்களுக்கு உணவுத்தேவை இருப்பதைக் குறிக்கும் என்று அவ் இயக்கம் குறிப்பிட்டுள்ளது. மேலும் இது எந்தவொரு உதவிக்கான ஒரு வேண்டுகோளாக கூட இருக்கலாம் என்றும் அவர்கள் தெரிவித்தனர்

இயக்கத்தின் படங்கள் மற்றும் வெள்ளைக் கொடிகள் சமூக ஊடகங்களில் வைரலாகின. மேலும் பல நல்ல உள்ளங்கொண்ட மலேசியர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்கு தயாராக இருக்கிறார்கள் என்றும் அப்பதிவில் தெரிவித்துள்ளனர்.

“தயவு செய்து மன அழுத்தத்தைத் தவிர்க்கவும். நீங்கள் பிச்சை எடுக்க தேவையில்லை, வெட்கப்பட தேவையில்லை. ஒரு வெள்ளைக் கொடியை மட்டும் பறக்க விடுங்கள் உதவி வரும் ”என்ற வாசகங்கள் வைரலன் படத்தில் கூறப்பட்டுள்ளது.

ஆனால் இவ்வாறு சோதனைகளை எதிர்கொள்ளும்போது ‘வெள்ளைக் கொடியை உயர்த்துவதற்கு’ மக்களுக்கு கற்பிக்க வேண்டாம் என்று பாஸ் கட்சியின் தலைவர் நிக் அப்துஹ் நிக் அஜீஸ் கூறினார்.

இதற்குப் பதிலாக,“கடவுளிடம் ஜெபத்தில் உங்கள் கைகளை உயர்த்துங்கள். அதுவே வாழ்க்கையின் சோதனையில் வலிமை மற்றும் நம்பிக்கையின் கொடி” என்றும் வெள்ளைக் கொடியை உயர்த்தக் கற்றுக் கொடுப்பதன் மூலம் சோதனையை எதிர்கொள்ளவதற்கு பதில் வாழ்வில் தோல்வியை பெற்றுக்கொள்ள பழக்கப்படுத்த வேண்டாம், ”என்று அவர் தனது முகநூலில் ஒர் பதிவின் வழி தெரிவித்தார்.

ஆனால் இது தொடர்பில் கருத்து வெளியிட்ட, வீட்டுவசதி மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சுரைடா ஹமாருடின் “உதவி தேவைப்படுபவர்களை அடையாளம் காண இந்த வெள்ளைக் கொடி பிரச்சாரத்தில் நான் இருக்கிறேன். கெஞ்சத் தேவையில்லை, சங்கடப்படத் தேவையில்லை. கொடியை பறக்க விடுங்கள் ”என்று அவர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here