6 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள்

பிகாஸ் திட்டத்தில் பதிவு

ஷா ஆலம், 
நாடு தழுவிய அளவில் உள்ள 4,537 நிறுவனங்களைச் சேர்ந்த 669,846 தொழிலாளர்கள் பிகாஸ் எனப்படும் தொழில்துறையின் பொது – தனியார் கூட்டமைப்பு கோவிட்-19 எதிர்ப்புச் சக்தித் திட்டத்தில் பதிவு செய்துள்ளனர்.

இந்தத் திட்டமானது கடந்த ஜூன் 16ஆம் தேதி அமல்படுத்தப்பட்டது. அதில் பதிவு செய்த தொழிலாளர்களுள் சிலாங்கூர், பினாங்கு, ஜோகூர் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த உற்பத்தித் துறையில் பணிபுரியும் 16,564 தொழிலாளர்கள் நேற்று முன்தினம் வரை தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.

குறிப்பாக பதிவு செய்த உற்பத்தித் துறை சார்ந்த தொழிலாளர்களுள் 581,440 பேர் சிலாங்கூர் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர் என அனைத்துலக வாணிபம், தொழில்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் அஸ்மின் அலி தெரிவித்தார்.

சிலாங்கூர் மாநிலத்தில் உற்பத்தித் துறையைச் சேர்ந்த 1,079 நிறுவனங்களிடம் இருந்து அமைச்சு விண்ணப்பம் பெற்றுள்ளது. இதில் 179,323 தொழிலாளர்கள் சம்பந்தப்பட்டுள்ளனர்.

மேலும்  செத்தியா சிட்டி மாநாட்டு மையத்தில் உள்ள தடுப்பூசி மையத்தில் 36,942 தொழிலாளர்களுக்குத் தடுப்பூசி போடப்படும். இந்தத் தடுப்பூசி மையத்தில் நாள் ஒன்றுக்கு 1,500 தொழிலாளர்களுக்குத் தடுப்பூசி போட முடியும் என அந்த மையத்தை நேற்று பார்வையிட்ட அவர் செய்தியாளர்களிடம் குறிப்பிட்டார்.

சுகாதார அமைச்சு, அறிவியல் தொழில்நுட்பம், புத்தாக்க அமைச்சின் ஆதரவோடு இந்த பிகாஸ் தடுப்பூசித் திட்டம் செப்டம்பர் மாத இறுதிக்குள் நிறைவு பெறும் என தாம் நம்புவதாக அஸ்மின் அலி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here