ஒப்பந்த மருத்துவர்கள் நிலைப்பாடு என்ன?

  அமைச்சரவையில் பேசப்படும்

ஒப்பந்த அடிப்படையியான மருத்துவர்களுக்கு நிரந்தர வேலை வழங்கும் விவகாரம் தொடர்பில் அமைச்சரவையில்  கூடிய விரைவில் விவாதிக்கப்படும் என சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் அடாம் பாபா தெரிவித்திருக்கிறார்.

ஒப்பந்த அடிப்படையிலான மருத்துவர்களின் விவகாரம் தொடர்பிலான ஆய்வறிக்கை தற்போது ஆய்வு  செய்யப்பட்டு அமைச்சரவையில் தாக்கல் செய்யப்படும்.

மே 21ஆம் தேதி வரையிலான தரவின்படி 35,216 ஒப்பந்த மருத்துவர்கள் உள்ளனர். அவர்களுள் 23,077 பேர் மருத்துவ அதிகாரிகளாவர். மேலும் 7,139 பேர் மருந்தகத் துறையைச் சார்ந்தவர்கள். இதர 5 ஆயிரம் பேர் பல் மருத்துவர்கள் ஆவர் என அவர் குறிப்பிட்டார்.

மேலும் நிரந்தர வேலை வாய்ப்புகள் அவர்களின் கல்வி அடைவு நிலை அடைப்படையில் வழங்கப்படுகிறது.

எனவே ஒப்பந்த அடிப்படையிலான மருத்துவர்கள் பொறுமை காக்கும்படி அவர் நேற்று நடைபெற்ற கோவிட்-19 தடுப்பூசித் திட்ட செய்தியாளர் சந்திப்புக் கூட்டத்தில் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here