செம்பனைத் தோட்டத்தில் ஐந்து நாட்களுக்கு முன் இறந்துவிட்டதாக நம்பப்படும் முதியவரின் சடலம் கண்டெடுப்பு

கோலக்கிராய்:

ங்குள்ள பாசீர் லாயாங், கம்போங் புனுட் சைஹ் அருகே உள்ள ஒரு செம்பனைத் தோட்டத்தில் நேற்று மாலை 6.15 மணியளவில் முதியவர் ஒருவர் இறந்து கிடக்கக் கண்டெடுக்கப்பட்டார்.

70 வயதான அந்த நபர் ஐந்து நாட்களுக்கு முன்பு இறந்துவிட்டதாக போலீசார் நம்புவதாக கோலக்கிராய் மாவட்ட காவல்துறை தலைவர் மஸ்லான் மாமட் தெரிவித்தார்.

“பாதிக்கப்பட்டவரின் இடது மற்றும் வலது கைகளில் காட்டு விலங்குகள் கடித்த அடையாளங்கள் உள்ளதாக நம்பப்படுகிறது.

பாதிக்கப்பட்டவர் கடந்த புதன்கிழமை முதல் காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டது, அத்தோடு பாதிக்கப்பட்டவருக்கு நீரிழிவு நோய், இதய பிரச்சினைகள் மற்றும் அல்சைமர் உள்ளிட்ட உடல்நலப் பிரச்சினைகள் இருந்ததாகவும், அவர் என்ன செய்கிறார் என்பதை அவர் அடிக்கடி மறந்துவிடுகிறார் என்றும் அவரது குடும்பத்தினரின் கூறியதாக,” அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக சுல்தான் இஸ்மாயில் பெட்ரா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், உடல் அழுகிய நிலையில் இருப்பதால் மரணத்திற்கான காரணத்தை உடனடியாகக் கண்டறிய முடியவில்லை என்றும் தடயவியல் நிபுணர்கள் கூறியதாக அவர் சொன்னார்.

இந்த வழக்கு திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது, இதில் எந்த கிரிமினல் கூறுகளும் இல்லை என்றும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here