கோலாலம்பூர், (ஜூலை 2) :
நாட்டில் EMCO அமல்படுத்தப்பட்ட பகுதிகளில் மருத்துவம் மற்றும் தடுப்பூசி செலுத்துவதற்காக கார் ஓட்டுநர் உட்பட ஒரு காரில் மூன்று பேர் பயணிப்பதற்கு போலீசார் இப்போது அனுமதிக்கின்றனர்.
மேற்குறிப்பிட்ட காரணங்களுக்காக பயணிப்பவர்கள் மைசெஜாத்ரா செயலியில் தங்களுடைய தடுப்பூசிக்கான முற்பதிவினை காண்பிக்க வேண்டும். அத்தோடு மருத்துவமனை அல்லது கிளினிக் கார்டு அல்லது சாலைத் தடைகளில் எஸ்எம்எஸ் மூலமான ஆதாரங்களை காட்ட வேண்டும் என்று போலீஸ் மா அதிபர் அக்ரில் சானி அப்துல்லா சானி இன்று ஒரு அறிக்கையில் குறிப்பிட்டார்