இன்று புதிதாக 6,982 பேருக்கு கோவிட் -19 தொற்று; சிலாங்கூரில் அதிகமானோர்( 2,907 ) பாதிப்பு.

பெட்டாலிங் ஜெயா ( ஜூலை 2) :

நாட்டில் நடமாட்டக் கட்டுப்பாடு அமலிலுள்ள போதும் தொற்றுக்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்தே வருகின்றது. கடந்த 24 மணி நேரத்தில் 6,982 பேர் புதிதாக கோவிட் -19 தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர் என்று மலேசிய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

சுகாதாரத்துறை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறுகையில், நாட்டில் இதுவரை மொத்தமாக 765,949 பேர் கோவிட் தொற்று நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கூறினார்.

மேலும் சிலாங்கூரில் 2,907 பேர் இன்று புதிதாக கோவிட் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து நெகிரி செம்பிலான் (606), சரவாக் (440), ஜொகூர் (517), கோலாலம்பூர் (637), பேராக் (182), கிளந்தான் (129), கெடா (257), சபா (230), லாபுவான்(131) , பினாங்கு (351), மலாக்கா (202), திரெங்கானு (44), பகாங் (329), புத்ராஜெயா (20), பெர்லிஸில் இன்று எந்தவொரு புதிய தொற்றுக்களும் பதிவாகவில்லை என்று கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here