கோலா சிலாங்கூர்: இங்குள்ள ஒரு கிராமத்தில் மாமாவால் வெட்டப்பட்டதாகக் கூறப்படும் சிறுமி பலத்த காயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளார். விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக கோல சிலாங்கூர் ஒ.சி.பி.டி. ராம்லி காசா தெரிவித்தார்.
கொலை என வகைப்படுத்தப்பட்ட இந்த வழக்கின் மேலதிக விபரங்கள் பின்னர் வெளியிடப்படும் என்று அவர் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 4) தெரிவித்தார். சந்தேக நபர் போதைக்கு அடிமையானவர் என்ற கூற்றுடன் இந்த சம்பவம் குறித்து முகநூலில் வைரலாகியது.




















