தமிழர் ஒருவருக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய பதவி

உலக அளவில் ஓர் அங்கீகாரம்

இன்டர்போலின் (The International Criminal Police Organization) தலைவராகவும், குற்ற புலனாய்வுத்துறையின் உதவி பணிப்பாளராகவும் பொலிஸ் அத்தியட்சகர் சரவணன் கன்னியப்பன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த பதவியேற்பு நிகழ்ச்சி மலேசியாவின் புக்கிட் அமானில் நடைபெற்றதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை இன்டர்போல் தேசிய மத்திய பணியகத்தின் தலைவர் குற்றப் புலனாய்வுத் துறையின் உதவிப் பணிப்பாளர் பதவி சவால் நிறைந்ததாக இருந்தாலும் சிறந்த முறையில் பணியாற்றுவதாக சரவணன் உறுதிபூண்டுள்ளார்.

மலேசியாவின் சித்தியவான் ஆயர் தாவார் தமிழ்ப் பள்ளியில் தமது தொடக்க கல்வியை தொடங்கிய சரவணன், யூ.பி.எம் எனப்படும் மலேசிய புத்ரா பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்று பின்னர் லண்டனில் தடயவியல் துறையில் முதுகலை, பி.எச்.டி பட்டத்தை பெற்றுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here