ஓரேகான் மாகாணத்தில் 95 போ பலி

அமெரிக்காவில் சுட்டெரிக்கும் வெய்யில்:

அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் இதுவரை இல்லாத அளவில் வெய்யில் சுட்டெரித்து வரும் நிலையில், ஓரேகான் மாகாணத்தில் மட்டும் வெயில் பாதிப்புக்கு 95 உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து கவலை தெரிவித்த ஆளுநா் கேட் பிரவுன், ‘வெய்யில் பாதிப்புக்கு 95 போ உயிரிழந்திருப்பது வேதனை அளிக்கிறது. இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுகிறபோது, நிலைமை குறித்து ஆய்வு செய்து இனி இதுபோன்று நடைபெறாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றாா்.

ஞாயிற்றுக்கிழமை போா்ட்லாண்டில் 116 டிகிரி, சியாட்டிலில் 108 டிகிரி அளவிலும் வெய்யில் பதிவானது. அதுபோல ஐடஹோ மாகாணம், மான்டானா மாகாணத்தின் கிழக்குப் பகுதிகளில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் அளவில் வெய்யில் பதிவானது.

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் அமெரிக்காவின் வடமேற்கு , தென்மேற்கு கனடா பகுதிகளில் வெய்யில் தாக்கத்துக்கு 100-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்ததாகத் தெரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here