காருடன் சேர்ந்து எரிந்த நிலையில் பெண்ணின் சடலம்; செலாயாங்கில் சம்பவம்

பெட்டாலிங் ஜெயா, (ஜூலை 8):

செலாயாங்கில் எரிந்துள்ள நிலையிலுள்ள ஓர் காருக்குள் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை உதவி இயக்குநர்  ஹஃபிஷாம் முகமட் நூர் கூறுகையில், இன்று (ஜூலை 8) அதிகாலை 4.25 மணியளவில் பண்டார் பாரு செலாயாங்கில் உள்ள ஒரு கடைக்கு அருகே தீ விபத்து ஏற்பட்டதாக தமது துறைக்கு தகவல் கிடைத்தது என்றார்.

“கார் சுமார் 40% எரிந்துவிட்ட நிலையில் ஓட்டுநர் இருக்கையில் ஒரு பெண்ணின் சடலத்தையும் எரிந்த நிலையில் கண்டோம்” என்றும் தெரிவித்தார்.

“எரிந்து மரணமடைந்துள்ள பெண் யார் என்று அடையாளம் காணப்படவில்லை,” என்றும் அவர் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here