தீபாவளியை முன்னிட்டு செவ்வாய் மற்றும் புதன் கிழமைகளில் டோல் இலவசம் !

கோலாலம்பூர்:

தீபாவளி கொண்டாட்டத்தை முன்னிட்டு நாடு முழுவதுமுள்ள நெடுஞ்சாலையில் பயணிப்பவர்கள் இலவச டோல் கட்டணத்தை அனுபவிக்கலாம் என்று பொதுப்பணித்துறை அமைச்சர் அலெக்சாண்டர் நந்தா லிங்கி தெரிவித்துள்ளார்.

இந்த இலவச டோல் கட்டணம் இன்று நள்ளிரவு 12.01 மணி முதல் அக்டோபர் 30 ஆம் தேதி இரவு 11.59 மணி வரை அமலில் இருக்கும் என்று அவர் சொன்னார்.

இலவச டோல் கட்டணம் சுமார் 38 மில்லியன் ரிங்கிட் மதிப்புடையது என்றும், இக்கட்டண செலவை முழுமையாக அரசாங்கமே ஏற்றுக் கொள்கிறது என்றும் நந்தா கூறினார்.

இந்நிலையில், ஜோகூரில் உள்ள சுல்தான் இஸ்கந்தர் கட்டிட டோல் சாவடி (ஜோகூர் காஸ்வே), தஞ்சோங் குபாங் (லிங்கேடுவா எக்ஸ்பிரஸ்வே) ஆகிய நெடுஞ்சாலைகளில் இந்த இலவச டோல் கட்டணம் அமலில் இல்லை என்றும் அவர் சொன்னார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here