தொழிலாளர்கள் விடுதியில் சண்டை வைரலான வீடியோவால் வெளிநாட்டவர் மூவர் கைது.

பத்து பஹாட், (ஜூலை 8):

ஸ்ரீ காடிங்கில் உள்ள ஒரு தொழிற்சாலை தொழிலாளர்கள் விடுதியில் நடந்த சண்டையின் வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, வெளிநாட்டு பிரஜைகளை விசாரணைக்காக போலீசார் கைது செய்துள்ளனர்.

புதன்கிழமை (ஜூலை 7) குறித்த வீடியோ தொடர்பாக போலீசாருக்கு அறிக்கை கிடைத்ததைத் தொடர்ந்து , இரண்டு வங்காளதேச பிரஜைகள் மற்றும் ஒருவர் இலங்கையைச் சேர்ந்தவர் என மூன்று பேரை போலீஸ் கைது செய்தது. கைது செய்யப்பட்டவர்கள் 23 முதல் 33 வயதுக்குட்பட்டவர்கள் என்று பத்து பஹாட் துணை போலீஸ் தலைவர் முகமட் இசுடின் ருங்காய் தெரிவித்தார்.

இந்த சம்பவத்தில் இலங்கை நாட்டைச் சேர்ந்த ஒருவர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர் தற்போது சுல்தானா நோரா இஸ்மாயில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார் என்றும் அவரது உடல்நிலை சீராக உள்ளது என்றும் வியாழக்கிழமை (ஜூலை 8) ஓர் அறிக்கையில் முகமட் இசுதீன் தெரிவித்தார்.

இவ்வழக்கு ஆயுதங்களுடன் கலகம் செய்ததற்காக தண்டனைச் சட்டத்தின் பிரிவு 148 ன் கீழ் விசாரிக்கப்படும் என்றும் இதற்காக சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார் .

– பெர்னாமா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here