ஜார்ஜ் டவுன்: கெடாவில் நகராண்மைக் கழகத்தினர் போல் உடை அணிந்தவர்களால் ஒரு நாய் கொல்லப்பட்ட காணெளியை பார்த்த 54 வயது தொழிலதிபரான ஆர். வில்சன் ஒருவர் போலீஸ் புகாரினை பதிவு செய்துள்ளார்.
கூலிம் நகராண்மைக் கழகம் (எம்.பி.கே.கே) ஆடைகளை அணிந்த சிலர் உட்பட ஒரு குழு, ஒரு நாய் மரம் மற்றும் உலோக கம்பியால் தாக்கியது தெரிந்தது. நாய் வலியால் கத்திக் கொண்டிருந்தது. ஆனால் அவர்கள் தொடர்ந்து தாக்கியதால் சில நிமிடங்களுக்குப் பிறகு நாய் இறந்தது என்று அவர் கூறினார்.
விலங்கு நலச் சட்டம் 2015 இன் பிரிவு 29 (1) (இ) இன் கீழ் இது குறித்து விசாரிக்க கால்நடை சேவைகள் துறையை வில்சன் வலியுறுத்தினார். முகநூலில் வெளியிடப்பட்ட அறிக்கையில், விலங்கு நலச் சட்டம் 2015 இன் கீழ் இந்த சம்பவம் குறித்து விசாரிக்க காவல்துறை மற்றும் எம்.பி.கே.கே ஆகியோருக்கு அரசு சார இயக்கத்தை சேர்ந்த வழக்கறிஞர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.