புக்கிட் ஜாலிலிலுள்ள ஸ்ரீ ராக்யாட் அடுக்குமாடிக்குடியிருப்பில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 11) முதல் EMCO அமல்

பெட்டாலிங் ஜெயா, ஜூலை 10 :

பண்டார் புக்கிட் ஜாலில் பகுதியிலுள்ள ஸ்ரீ ராக்யாட் அடுக்குமாடிக் குடியிருப்பு வட்டாரத்தில்  ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 11) முதல் ஜூலை 24 ஆம் தேதி வரை கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு (EMCO ) உத்தரவு அமல் படுத்தப்படுகின்றது.

இது தொடர்பில் கருத்துரைத்த துணை பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப், ஸ்ரீ ரக்யாட் அடுக்குமாடிக்குடியிருப்பினை (Apartment Sri Rakyat) EMCO வின் கீழ் வைப்பதற்கான முடிவு சுகாதார அமைச்சினால் (MOH) அக்குடியிருப்பு பகுதியில் ஏற்பட்ட நோய்தொற்றின் ஆபத்தினை மதிப்பீடு செய்த பின்னரே இம் முடிவு எடுக்கப்பட்டது என்றார்.

“சுகாதாரத் துறையால் நடத்தப்பட்ட கண்காணிப்பின் முடிவுகள், தொற்றுக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு மற்றும் இதுவரை மொத்தம் 94 பேர் நேர்மறையான பதில்களை பதிவு செய்தது போன்றவற்றின் கண்காணிப்பின் விளைவாகவே இம்முடிவு எடுக்கப்பட்டது என்றும் கூறினார்.

குறித்த இந்த வட்டாரத்தில் 598 குடியிருப்பாளர்களைத் திரையிட்டதில் 94 பேருக்கு நேர்மறையான (positive) பதில் கிடைத்தது குறிப்பிடத்தக்கது என்று நேற்று ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here