இருமலை நிறுத்தும்  எளிய வழிகள்

 

வலிக்கு உதவும் வீட்டு மருத்துவம்!

சளி, காய்ச்சல் போன்ற நேரங்களில் உண்டாகும் இருமலை காட்டிலும் வறட்டு இருமல் அதிக உபாதை தரக்கூடியது. குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவரையும் பாதிப்புக்குள்ளாக்கும் வறட்டு இருமல் பகலை காட்டிலும் இரவு நேரங்களில் கூடுதலாக இருக்கும்.இவை வைரஸ் தொற்றாலும் உருவாகலாம்.

பாலில் ஒரு தேக்கரண்டி மஞ்சள் ,  அரைத் தேக்கரண்டி தேன் கலந்து பருகினால் வறட்டு இருமலைத் தடுக்கலாம்.

– ஒரு டீஸ்பூன் சோம்புஅரை பட்டை, ஒரு தேக்கரண்டி இஞ்சித் தூளை நீரில் கலந்து நன்றாக கொதிக்க வைத்து ஆரியவுடன் பருகவும். வறட்டு இருமலுக்கு இதமாக இருக்கும்.

– வெங்காயத்தை நன்றாக அரைத்து ஒரு ஸ்பூன் தேனுடன் கலந்து சாப்பிட்டால் வறட்டு இருமல் நாளடைவில் பறந்து போய்விடும்.

– தேனில் உள்ள இருமலைக் குணப்படுத்தும் பண்புகள்வறட்டு இருமல் பிரச்சினையில் இருந்து உடனடி நிவாரணம் அளிக்கும். அத்தகைய தேனை 5 டேபிள் ஸ்பூன் எடுத்துஅத்துடன் 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய், 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்துஅடுப்பில் வைத்து 2 நிமிடம் சூடேற்றி இறக்கி குளிர வைத்து சாப்பிடவறட்டு இருமல் பிரச்சினையில் இருந்து விடுபடலாம்.

– கற்றாழையில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள்வறட்டு இருமலுக்கு நல்ல நிவாரணம் அளிக்கும். இதில் உள்ள வலி நிவாரண பண்புகள்தொண்டைச் சுவற்றில் இருக்கும் பாதிக்கப்பட்ட திசுக்களை சரிசெய்யும்.

அதிலும் கற்றாழை ஜெல் ஜூஸில் தேன் கலந்து ஒருவர் தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடித்தால்வறட்டு இருமல் நீங்குவதோடுஒட்டுமொத்த உடல் ஆரோக்கியமும் மேம்படும்.

– யூகலிப்டஸ் எண்ணெயில் உள்ள ஆன்டி-பாக்டீரியல், அழற்சி எதிர்ப்பு பண்புகள்வறட்டு இருமலில் இருந்து நிவாரணம் அளிக்கும். அதற்கு ஒரு அகலமான பாத்திரத்தில் நன்கு கொதிக்க வைத்த சுடுநீரை நிரப்பிஅதில் சில துளிகள் யூகலிப்டஸ் ஆயில் சேர்த்து கலந்து, 15 நிமிடம் ஆவி பிடிக்க வேண்டும். இப்படி சில நாட்கள் தொடர்ந்து பின்பற்றினால்வறட்டு இருமலைத் தடுக்கலாம்.

சில கவனக்குறிப்புகள்-

  • மக்கள் இருமலின் போது ப்ரோடஸ்ட் செய்த உணவைத் தவிர்க்க வேண்டும். உதாரணமாக, வெள்ளை ரொட்டி, வெள்ளை பாஸ்தா, சர்க்கரை நிறைந்த உணவுப் பொருள்களைத் தவிர்த்து, அதற்கு மாறாக பச்சை காய்கறிகளை உட்கொள்ள வேண்டும்.
  • இருமலின் போது அதிக எண்ணெய் நிறைந்த உணவுகளை சாப்பிடுவதைத் தவிர்க்கவும், ஏனெனில் எண்ணெய் நிறைந்த உணவு பொருட்கள் இருமலை மேலும் தூண்டுகிறது. பக்கோடா பஜ்ஜி போன்றவற்றையும் தவிர்க்கவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here