அன்பும்.. துவேஷமும்.. பின்னணிப் பிணைந்த இரு முரண்கள்!

தூண்டி விடப்படுவதிலிருந்து துவேஷம் பிறக்கிறது.. பாராட்டுதலிலிருந்து அன்பு சுரக்கிறது.. இரண்டும் இரு வேறு முரண்கள் என்றாலும்.. இவை பிறப்பது மயிரிழை வித்தியாசத்தில்தான் இருக்கிறது என்பது எத்தனை ஆச்சரியமானது.

அன்பால் செய்யும் செயல் முழுமை பெறுகிறது. அடுத்தவர் மீது துவேஷம் வளர்ப்பதால் எந்த பயனும் இல்லை மாறாக நம்மிடம் இருக்கும் நல்ல குணங்கள் எல்லாம் துவேஷம் காட்டுவதால் நம்மை அறியாமலேயே மறைந்துக் கொண்டிருக்கும். ஒவ்வொரு ஜீவராசியும் இவ்வுலகில் எதிர்பார்ப்பது அன்பு ஒன்று தான். மற்றவரிடம் துவேஷம் வளர்ப்பதால் பகை வளருமே தவிர வேறெதுவும் நடக்காது.

உயிர்களிடத்திலே அன்பு செலுத்துங்கள். அன்பினால் எல்லாவற்றையும் வசப்படுத்த முடியும் ஆனால் துவேஷம் பாராட்டுவதால் எதையும் நாம் அடைய முடியாது. உண்மையான அன்பு இருக்கும் இடத்தில் இறைவன் இருக்கிறான் என்பார்கள்.

உளப்பூர்வமாக ஒரு செயலைச் செய்யுங்கள் மனதில் பகை வளர்த்து ஒருவருக்கு நன்மை செய்வது போல் நடிக்கக் கூடாது. நாம் செய்யும் தீய செயல்களுக்கான பயனை நாம் கண்டிப்பாக அனுபவித்தே ஆக வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

அன்பு சூழ் உலகு இது. அன்பு கொண்டவரால் எந்த செயலையும் எளிதாக சாதிக்க முடியும் ஆனால் மற்றவரைப் பார்த்துப் பொறாமைப்பட்டு துவேஷம் வளர்ப்பது நம் வளர்ச்சியை நாமே தடுப்பது போலாகி விடும்.

போட்டி அவசியம் தான் ஆனால் பொறாமை வேண்டாமே. ஆரோக்கியமான போட்டியாக இருக்க வேண்டும். அன்போடு நாம் பிறர் ஜெயித்தாலும் அவரை மனதாரப் பாராட்ட வேண்டும். உயிர்கள் விரும்புவது அன்பு ஒன்றே. துவேஷம் பாராட்டுவதால் எந்த நன்மையும் இல்லை. அதனால் துவேஷம் வேண்டாம் எப்பொழுதும் அனைவரிடத்திலும் அன்பு காட்டுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here