தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் பொறுப்பு- தமிழக அரசு உறுதி

 பொறுப்பேற்றார் திண்டுக்கல் லியோனி

தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவராக திண்டுக்கல் ஐ. லியோனி இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

பாடப்புத்தகங்களை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு இலவசமாகவும், தனியார் பள்ளிகளுக்கு மிகக் குறைந்த விலையிலும் வழங்கி வரும் பணியினை தமிழ்நாடு பாடநூல் , கல்வியியல் கழகம் மேற்கொண்டு வருகிறது. 

தமிழ்நாட்டு மாணவ, மாணவியரின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் வகையில் வரலாறு, அரசியல், பொது அறிவு ,சமூகவியல், அறிவியல் , தமிழர் பண்பாடு, நாகரிகத்தை எடுத்துரைக்கின்ற பணியினை தமிழ்நாடு பாடநூல், கல்வியியல் பணிகள் கழகம் செய்து வருகிறது.

இந்த சூழலில் தமிழ்நாடு பாடநூல், கல்வியியல் பணிகள் கழகத் தலைவராக திண்டுக்கல் லியோனியை தமிழக அரசு உத்தரவிட்டது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில் தமிழ்நாடு பாடநூல், கல்வியியல் பணிகள் கழகத் தலைவராக திண்டுக்கல் ஐ லியோனி இன்று பொறுப்பேற்று கொண்டார்.

பட்டிமன்றம் என்ற போர்வையில் பெண்களை இழிவாக பேசுவதையும், அரசியல் கட்சித் தலைவர்களை வசை பாடுவதும், நாகரீகமற்ற கருத்துக்களைப் பேசி வரும் லியோனியை தமிழ்நாடு பாடநூல் ,  கல்வியியல் பணிகள் கழகத் தலைவராக நியமிக்க கூடாது என்று பலரும் கூறினர்.

இதனால் தமிழக அரசு லியோனி நியமனத்தை பரிசீலிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் லியோனி திட்டமிட்டபடி பதவியேற்று கொண்டது பலருக்கு ஏமாற்றமாகிவிட்டது. 

பட்டிமன்ற பேச்சை பாட நூலோடு முடிச்சு போடுவது சரியானதல்ல என்பதை தமிழக அரசு உறுதி செய்திருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here