அனைத்துலக வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சின் (மிட்டி) பயணங்களுக்கான ஆவணங்களை ஜூலை 18 முதல் 21 வரையிலான நான்கு நாட்களுக்கு போலீசார் ஏற்று கொள்ள மாட்டார்கள்.
கடந்த இரண்டு நாட்களாக நெடுஞ்சாலைகளில் அதிக எண்ணிக்கையிலான வாகனங்கள் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக போலீஸ் படைத்தலைவர் டத்தோ ஶ்ரீ அக்ரில் சானி அப்துல்லா சானி தெரிவித்தார்.
மாநில எல்லைகளில் உள்ள அனைத்து சாலைத் தடைகளிலும் அமலாக்கத்தை அதிகரிக்கப்பட்டுள்ளன. மேலும் மிட்டியின் கடிதத்தை ஒப்புதலாக ஏற்றுக்கொள்ளாது. பொறுப்பற்ற சிலர் ஹரி ராயா எயிலாதாவைக் கொண்டாடுவதற்காக மாநிலங்களை கடக்க ஒப்புதல் என மிட்டியின் அனுமதி கடிதத்தை தவறாக பயன்படுத்துவதைத் தவிர்ப்பதற்காக இது என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
இருப்பினும், இந்த தடை போலீசாரின் அனுமதியுடன் அவசரகால விஷயங்களுக்கும், தடுப்பூசிகள் உள்ளிட்ட சுகாதார விஷயங்களுக்கும் பொருந்தாது என்றார். தடையை மீறும் எந்தவொரு தரப்பினரும் சமரசமின்றி கடுமையான நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும் என்றும், COVID-19 தொற்றுநோயின் வளைவைத் தட்டையாக்குவதில் பொதுமக்கள் கூட்டாக பங்கு வகிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் விளக்கினார்.