பெட்டாலிங் ஜெயா: சுகாதார அமைச்சகம் கடந்த 24 மணி நேரத்தில் 10,972 கோவிட் -19 தொற்றினை பதிவு செய்துள்ளது. இது நேற்று பதிவு செய்யப்பட்ட 10,710 நோய்த்தொற்றுகளிலிருந்து சற்று அதிகரித்துள்ளது.
ஒரு டுவீட்டில், சுகாதார தலைமை இயக்குநர் ஜெனரல் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறுகையில், மொத்த தொற்றுநோய்களின் எண்ணிக்கை இப்போது 927, 533 ஆக உள்ளது. சிலாங்கூரில் அதிக எண்ணிக்கையிலான 4,404 தொற்றுகள் பதிவாகியுள்ளன.