சீரியலில் பிக்பாஸ் அனிதா சம்பத்.!

 விஜய் டிவியின் பலே திட்டம்.!

செய்தி வாசிப்பாளரான அனிதா சம்பத் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமடைந்தார். யூடியூப் சேனலில் தன்னுடைய கணவருடன் இணைந்து அனிதா சம்பத் நிறைய வீடியோக்களை வெளியிட்டு வருவார். இதற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைக்கும்.

அத்துடன் ரசிகர்களின் கேள்விகளுக்கு அனிதா சம்பத் பதில் அளித்து வருவார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் அனிதா சம்பத் தொலைக்காட்சிகளில் செய்தி வாசிப்பதை முற்றிலும் நிறுத்திவிட்டார்.

ஆனால், விஜய் தொலைக்காட்சியின் ஒருசில நிகழ்ச்சிகளில் அனிதா சம்பத் கலந்து கொண்டு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் நடைபெற்ற பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியிலும் அவர் கலந்து கொண்டார். இத்தகைய நிலையில், கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் சில்லுனு ஒரு காதல் என்ற தொடரில் ஒரு கெஸ்ட் ரோலில் அனிதா சம்பத் நடிக்கப்போவதாக கூறப்படுகிறது.

விரைவில் அவர் நடித்த எபிசோடு ஒளிபரப்பாகும் என்றும், இதன் பின்னர், தங்களது சீரியலில் களமிறக்க விஜய் டிவி அவருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here