யுனிவர்சிட்டி உத்தாரா மலேசியாவின் தங்குமிட விடுதியில் தீ; மாணவர்கள் பலர் தங்கள் உடைமைகளை இழந்துள்ளனர்

அலோர் செடார் :  யுனிவர்சிட்டி உத்தாரா மலேசியா (UUM) மாணவர் விடுதித் தொகுதியில் நான்கு அறைகள் சேதமடைந்துள்ளன. இன்று காலை 10.55 மணிக்கு தீ விபத்து குறித்து அழைப்பு வந்ததாகவும், புக்கிட் காயு ஈத்தாம் மற்றும் ஜித்ரா தீயணைப்பு நிலையங்களைச் சேர்ந்த 13 தீயணைப்பு வீரர்கள் காலை 11.08 மணிக்கு சம்பவ இடத்திற்கு சென்றதாகவும் கெடா தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை துணை இயக்குநர் முகமட் எஹ்சன் முகமட் ஜெய்ன் தெரிவித்தார்.

சம்பவ இடத்திற்கு வந்ததும், தீயணைப்பு வீரர்கள் விடுதி கட்டிடத்தில் உள்ள 12 தங்குமிட அறைகளில் நான்கு தீப்பிடித்ததைக் கண்டனர்.  தீ இரண்டு அறைகளுக்கு 90 விழுக்காடு  சேதத்தை ஏற்படுத்தியுள்ளது, மற்ற இரண்டு அறைகள் 70 சதவிகிதம் சேதமடைந்துள்ளன என்று அவர் செவ்வாயன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார். ஆனால் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை.

தீ விபத்துக்கான காரணம் மற்றும் மொத்த இழப்புகள் இன்னும் விசாரணையில் உள்ளன என்றார். இதற்கிடையில், பாதிக்கப்பட்ட மாணவர்கள் அருகிலுள்ள தொகுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக யுயுஎம் துணைவேந்தர் டத்துக் டாக்டர் அஹ்மத் பஷாவிர் அப்துல் கானி தெரிவித்தார்.

தீ விபத்தில் சிக்கியுள்ள மாணவர்களின் சுமையை குறைக்க உதவும் பண உதவி மற்றும் தேவைகளையும் பல்கலைக்கழகம் வழங்கும் என்றார். தீ விபத்தில் அழிக்கப்பட்ட மாணவர்களின் பயண ஆவணங்களை மாற்றுவதற்கும், ஆலோசனை உதவிகளை வழங்குவதற்கும் பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்யும் என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here