நாட்டில் புதிதாக 18 கோவிட்-19 கொத்தணிகள் அடையாளம் காணப்பட்டன; சுகாதார இயக்குநர் ஜெனரல் தகவல்.

பெட்டாலிங் ஜெயா, ஜூலை 21:

நாட்டில் உள்ள 18 புதிய கோவிட் -19 கொத்தணிகளில் 13 பணியிடங்களுடன் தொடர்புடையது என்று சுகாதார இயக்குநர் ஜெனரல் கூறுகிறார்.

டான் ஸ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா இது பற்றி கருத்து தெரிவித்த போது, தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து நாட்டில் 3,299 கொத்தணிகள் (clusters) பதிவு செய்யப்பட்டுள்ளது.

13 புதிய பணியிடக் கொத்தணிகளில் , நான்கு சிலாங்கூரிலும், மூன்று ஜோகூரிலும் மற்றும் இரண்டு கோலாலம்பூரிலும் உள்ளன. ஒவ்வொன்றும் கிளந்தான், மலாக்கா, நெகிரி செம்பிலான் மற்றும் திரெங்கானு ஆகிய இடங்களில் உள்ளன.

மேலும் நேற்று 93 பேர் உயிரிழந்தனர், அதில் 31 பேர் சிலாங்கூரில் உள்ளவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜோகூர் (16), மலாக்கா (9), கெடா (8), பகாங் (7), பினாங்கு, நெகிரி செம்பிலான் மற்றும் பேராக் ஆகிய இடங்களில் தலா 5!இறப்புக்களும் கோலாலம்பூர், சபா மற்றும் சரவாக் ஆகிய இடங்களில் தலா 2 இறப்புக்களும் மற்றும் தெரெங்கானுவில் ஒரு இறப்பும் பதிவாகியுள்ளன.

இந்த கோவிட் -19’தொற்றுநோய் இதுவரை மலேசியாவில் 7,241 உயிர்களை காவு கொண்டுள்ளது. மேலும் நேற்று புதிய கோவிட் -19 வழக்குகளின் எண்ணிக்கை 12,366 ஆக உயர்ந்தது, சிலாங்கூர் 5,524 புதிய தொற்றுக்கள் பதிவாகியுள்ளது, கோலாலம்பூர் (1,580) மற்றும் நெகிரி செம்பிலான் (970) போன்ற மாநிலங்கள் அதிக தொற்றுக்களை பதிவு செய்தன.

அத்துடன் ஜூலை 19 ஆம் தேதி நிலவரப்படி R0 (R-naught) மதிப்பு 1.14 என்றும், திரெங்கானு மிக உயர்ந்த மதிப்பை 1.3 ஆகவும் பதிவு செய்துள்ளார்.

நாட்டில் 133,703 தொற்று நோய்கள் செயலில் (active cases) உள்ளன. இதில் 924 நோயாளிகள் ஐ.சி.யுவிலும், 448 பேர் சுவாசக்கருவியின் உதவியுடனும் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here