உள்ளத்தின் ஏக்கம்

“மனதின் கலக்கத்தையும் உலகின் இரைச்சலையும் கடந்து  ஓர் ஆழமான ஏக்கம் நம்முள் இருந்து மேலெழுகிறது:   “உலகம் நம் கவனத்தை அதன் பக்கம் இழுக்கும் போது,  உள்ளமோ  நம்மைத் தன் பக்கம் அழைக்கிறது.”

ஒவ்வொரு மனிதனுள்ளேயும் மிகவும் ஆழமான ஒரு தாகம், ஓர் ஏக்கம், ஒரு தேவை, ஒரு விருப்பம் இருக்கிறது. உள்ளத்தின் ஏக்கம் என்பது ஒரு குரல்.  அது அமைதியாக  ஆனால் தெளிவாகப் பேசுகிறது.  அது வெற்றியை மட்டும் தேடுவதில்லை, அது நிறைவின் உணர்வை நாடுகிறது.  நாம் இருட்டில் நின்றபோதும், அது ஒளியைத் தேடுகிறது.  நம் வாழ்க்கையின் யதார்த்தங்கள் வேகமாக ஓடினாலும்,   நாம் எந்த மதத்தைப் பின்பற்றினாலும்  எந்தக் கலாச்சாரத்தைப் பின்பற்றி வாழ்ந்து வந்தாலும் நம் உள்ளத்தின்  குரல் மட்டுமே நம்மைத்  தொடர்ந்து  அழைத்துக்கொண்டே இருக்கிறது.   

உதாரணத்திற்கு, நாம் பிறந்தபோது உயிரோடு இருப்பதற்கு நமக்குப் பெயர் தேவையாக இல்லை. வாழ்வதற்கு மிக அடிப்படை விஷயங்களான – மூச்சு வந்துபோவது, வளர்வது – இவற்றால் நாம் உயிரோடிருந்தோம்; ரத்தம் ஓடிக்கொண்டிருந்தது; இருதயம் துடித்துக்கொண்டிருந்தது; உயிரோடிருப்பதற்கு என்னத் தேவையோ அது நடந்துக்கொண்டிருந்தது. ஆனால், நாம் வளர்ந்து வரும்போது  நம்முடைய கண்ணோட்டமும் மாறிவிடுகிறது. ஏனென்றால், இந்தச் சமூகம் நம்மை அவ்வாறு காண பழக்கப்படுத்திவிட்டது.  நாம் பிறந்தபோது பணக்காரர்களாகவோ ஏழையாகவோ இல்லை. அவை காலப்போக்கில் வருவது. அதோடு நமக்கு இந்த உலகத்தைப் பற்றிய எண்ணங்களோ கருத்துகளோ கிடையாது. ஆனால், இப்போது உள்ளதை உள்ளவாறே பார்க்கும் தன்மையை நாம் இழந்துவிட்டோம்.  

இந்த ஜீவனை நம்புவதற்கு நமக்குப் பிறபொருள்கள் தேவையாக இருக்கின்றன. உயிர் அற்புதமானது எனக் கூறுவதற்குப் புத்தகம் தேவையாக இருக்கிறது. காரின் பின்புற கண்ணாடியில், “புன்னகை செய்,”  என்று ஓர் அட்டையை மாட்ட வேண்டியதாக இருக்கிறது.  ஆயினும் நாம் உயிரோடிருக்கும் வரை இந்தக் குரல் தொடர்ந்து ஒலித்துக்கொண்டேயிருக்கும். உதாரணத்திற்குப், பாலைவனத்தில் தாகத்தால் தவிப்பவர்களுக்குத் தண்ணிரைப் பற்றி வர்ணனைச் செய்யப்பட்ட புத்தகங்களைக் கொடுத்தால் அவருடைய தாகம் தணியாது. நாம் விஞ்ஞான வளர்ச்சியின் மூலமாகவோ, அபாரமான புதிய கண்டுப்பிடிப்புக்களினாலோ, மற்றும் எண்ணங்களினாலோ நம்முடைய உள்ளத்தின் தாகம் தணிக்கப்படும் என எதிர்பார்க்கிறோம். ஆனால், உள்ளுணர்வை உணராதவரை, இந்த உயிரின் மகிமையை அறியாதவரை இந்த உள்ளத்தின் ஏக்கம் தணியாது. எனவே, இந்த உள்ளத்தின் குரலைச் செவிமடுங்கள். 

கடந்த 60 வருடங்களாக திரு பிரேம் ராவத் அவர்கள் தனி ஒரு  மனிதனின் உள் அமைதியைப் பற்றி உலகமுழுவதும் உறையாற்றி வருகிறார். நாடாளுமன்றம் முதல் சிறைகள், பள்ளிகள், பல்கலைக்கழகங்கள், தொலைக்காட்சிஸ்டூடியோக்கள்  வரை பல்வேறு இடங்களில் அவர் உரையாற்றியுள்ளார்.

மேலும் தெரிந்துகொள்ள, கீழே உள்ள இணைப்பை பார்வையிடுங்கள்:

www.premrawat.com

ullathinkural.com

www.timelesstoday.tv

https://www.youtube.com/@PremRawatOfficial

https://youtube.com/@sovtamil6222?si=Bhum5Mk7Ihmd9NLB

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here