ரொம்ப பயமா இருக்குது-குஷ்பு பேட்டி.!

தனது ட்விட்டர் கணக்கு ஹேக்கிங் செய்யப்பட்டது தொடர்பாக நடிகை குஷ்பூ டி.ஜி.பி. அலுவலகத்தில் புகார் அளித்தார். 

நடிகை குஷ்பூ சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். இந்த செய்தியாளர்கள் சந்திப்பில், ” ட்விட்டரில் எனது மெயில் ஐடி ஏற்றுக்கொள்ளப்படாது என தகவல் வந்ததும் நான் சந்தேகமடைந்தேன். பின்னர், மறுநாள் காலையில் அதனை பார்க்கையில், எனது ட்விட்டர் கணக்கு ஹேக்கிங் செய்யப்பட்டது உறுதியானது. ட்விட்டரில் புகார் தெரிவித்ததற்கு, அவர்கள் பலவழியையும் கூறினார்கள்.

எனக்கு என்ன பயம் என்றால் எனது கணக்கை தவறாக உபயோகம் செய்யக்கூடாது என்பது தான். காவல்துறை அதிகாரிகளிடம் தகவல் தெரிவிக்க, டி.ஜி.பியிடம் புகார் அளித்துள்ளேன். அவர் ட்விட்டர் கணக்கை மீட்பதாக உறுதியளித்துள்ளதாகத்தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here