கடலுக்கடியில் அருங்காட்சியகம் திறப்பு :

கிரீஸ் நாட்டில்  மெய் சிலிர்க்க வைக்கும் படங்கள்!!

கிரீஸில் கடலுக்கடியில் அருங்காட்சியகம் திறக்கப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியகம் பெரிஸ்டெரா (Peristera) என்ற தீவுக்கு அப்பால் கடலுக்கு அடியில் உள்ளது.

சென்ற ஆண்டு திறக்கப்பட்டிருந்தாலும், COVID-19 நோய்த்தொற்றால், அதற்கு வரவேற்பு சற்று மந்தமாகவே இருந்தது.

கிரீஸ், தனது சுற்றுலாத் துறையை மீண்டும் திறந்துள்ள வேளையில், அதன் மூலம் வருவாய் திரட்டப்படும் என நம்பப்படுகிறது.

ஒரு முறை முக்குளிப்பதற்கு சுமார் 110 டாலர் கட்டணம் செலுத்த வேண்டும்.இதுவரை, சுமார் 300 பேர் அந்த அருங்காட்சியகத்திற்குச் சென்றுள்ளனர்.

ஆனால், யார் வேண்டுமென்றாலும் அதைக் காண முடியாது.அவ்வளவு ஆழத்திற்குச் செல்வது சிரமம் என்பதால், தேர்ச்சி பெற்ற முக்குளிப்பாளர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here