நெடுஞ்சாலையில் பழுதான காரின் டயரை மாற்றி கொண்டிருந்தபோது டொயோட்டா ஹெலக்ஸ் கார் மோதி ஒருவர் சம்பவ இடத்திலேயே பலி; மற்றவருக்கு பலத்த காயம்

ஜோகூர் பாரு: ஜாலான் ஜோகூர் பாரு – ஆயர் ஈத்தாம் (ஸ்கூடாய்) 8ஆவது கிலோ மீட்டரில் நேற்று காரின்   டயரை மாற்ற முயன்றபோது, ​​நான்கு சக்கர வாகனம் மோதியதில் ஒருவர் கொல்லப்பட்டார். அவரது நண்பர் பலத்த காயமடைந்தார்.

காலை 11.15 மணியளவில் இந்த சம்பவம் நிகழ்ந்ததாக ஜோகூர் பாரு உத்தாரா ஒ.சி.பி.டி உதவி ஆணையர் ரூபியா அப்த் வாஹித் தெரிவித்தார்.

புரோட்டான் வாஜா காரை ஓட்டி வந்த 55 வயது பாதிக்கப்பட்டவர் மற்றும் அவரது நண்பர் 40, ஜோகூர் பாருவில் இருந்து ஸ்கூடாய் நோக்கி சென்று கொண்டிருந்தபோது கார் டயர் பழுதடைந்ததாக அவர் கூறினார்.

49 வயதுடைய ஒருவரால் ஓட்டப்பட்ட டொயோட்டா ஹிலக்ஸ் அவர்கள் மீது மோதியதில் கார் டயர் மாற்றி கொண்டிருந்த அவர்கள் மீது மோதி, ஒருவர் தலையில் காயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார், அதே நேரத்தில் அவரது நண்பர் பலத்த காயமடைந்தார். சிகிச்சைக்காக சுல்தானா அமீனா மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.

இந்த விபத்துக்கான சாட்சிகளோ அல்லது பாதிக்கப்பட்ட இருவரின் குடும்பங்களைப் பற்றிய தகவல்கள்களோ இருந்தால் 011-16490168 அல்லது ஜோகூர் பாரு உத்தாரா மாவட்ட காவல் தலைமையகம் 07-5563122 என்ற புலனாய்வு அதிகாரி இன்ஸ்பெக்டர் ஓங் ஜிங் சியோங்கை தொடர்பு கொள்ளுமாறு அவர் வலியுறுத்தினார்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here