சரவாக்கில் இந்தாண்டின் முதல் 6 மாதத்தில் பாலியல் வன்முறை 14% அதிகரிப்பு

இந்த ஆண்டின் முதல் 6 மாதத்தில் சரவாக்கில்  67 பாலியல் வன்முறை வழக்குகளைப் பதிவு செய்துள்ளது.  இது கடந்த ஆண்டு இதே காலத்தை விட 14% அதிகரிப்பு. கூச்சிங்கில் உள்ள பெட்ரா ஜெயாவில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் புள்ளிவிவரங்களை முன்வைத்து சரவாக்  சமூக நல்வாழ்வு பெண்கள் குடும்பம் மற்றும் குழந்தை பருவ மேம்பாட்டு அமைச்சர் பாத்திமா அப்துல்லா கடந்தாண்டு 2020 ஜனவரி முதல் ஜூன் வரை 59 வழக்குகள் இருந்ததாக கூறினார்.

இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் பதிவான மொத்தம் 67 வழக்குகளில் 39 பாதிக்கப்பட்டவர்களின் காதலர்களாலும், 23 பேர் அறிமுகமானவர்களாலும், ஐந்து பேர்  தந்தையாலும் பாதிக்கப்பட்டவர்களாவர்  என்று அவர் கூறினார்.

இதில் ஐம்பது வழக்குகள் 13 மற்றும் 16 வயதுக்குட்பட்ட பாதிக்கப்பட்டவர்களை உள்ளடக்கியது. பாத்திமா கூறுகையில், 41 வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் கர்ப்பமாகி இருக்கின்றனர். அவர்கள்  13 முதல் 16 வயது வரையிலானவர்களாவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here