கோவிட்-19 தொற்றுக்குள்ளாகி தனிமைப்படுத்தப்பட்ட ஆடவர் வீட்டிலேயே மரணம்

கோலாலம்பூர்: கோவிட் -19 நோயால் பாதிக்கப்பட்டு, வீட்டு தனிமைப்படுத்தலில் இருந்த ஒருவரை, அவரது தம்பி மதிய உணவுக்கான ஆடரை எடுப்பதற்கு அவரை எழுப்ப முயன்ற போது, அவர் மயக்க நிலையில் இருக்க கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் தீயணைப்பு வீரர்கள் உடலை அகற்ற முற்பட்ட வேளை அவர் இறந்தது உறுதி செய்யப்பட்டது.

பாதிக்கப்பட்டவரும் அவரது இரு உடன்பிறப்புக்களும் , அனைவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு, சுகாதார அமைச்சின் உத்தரவின் பேரில் அவர்களின் PJS4 வீட்டில் வீட்டு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த உத்தரவிடப்பட்டது.

சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை இயக்குநர் நோராஸாம் காமிஸ் இச்சம்பவம் பற்றி கருத்துரைத்த போது, ஜூலை 29 ஆம் தேதி அன்று செய்யப்பட்ட கோவிட் -19 பரிசோதனையில் 41 வயதான பாதிக்கப்பட்டவருக்கும், அவரது இளைய சகோதரர்களுக்கும் கோவிட்-19 வைரஸ் தொற்று ஏற்பட்டிருந்ததாக கூறினார்.

நேற்று (ஆகஸ்டு 6) அதிகாலை 5.30 மணிக்கு, பாதிக்கப்பட்டவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

“அவரது இளைய சகோதரன் அவரது உணவு ஆர்டரைக் கேட்பதற்காக நண்பகல் 12.30 மணிக்கு அவரை எழுப்ப முயன்றார். “எனினும், அவர் சுயநினைவில்லாமல் இறந்துவிட்டதாக சந்தேகப்படுகிறோம்,” என்று நோராஸம் கூறினார்.

பின்னர் ஜாலான் பெஞ்சாலா தீயணைப்பு மற்றும் மீட்புக்குழுவிற்கு இரவு 9.26 மணியளவில் அவரது உடலை அகற்றுவதற்கு அழைப்பு கிடைத்ததாகவும், அதனைத் தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் உடலை மீட்டு, மேலதிக நடவடிக்கைகளுக்காக போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here