எகிப்தில் நடைபெறும் எல்-கன்வா ஸ்குவாஷ் போட்டியில் சிவசங்கரி அதிரடி சாதனை

கோலாலம்பூர், மே 22 – எகிப்தில் நடந்த எல்-கன்வா அனைத்துலக ஸ்குவாஷ் போட்டியின் இரண்டாவது சுற்றில் உலகின் 10-வது நிலை ஆட்டக்காரரான வேல்ஸைச் சேர்ந்த டெஸ்னி எவன்ஸ் 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய தேசிய ஸ்குவாஷ் வீரர் எஸ்.சிவசங்கரி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியதோடு பாராட்டுகளையும் பெற்றார்.

உலகின் 36 ஆவது இடத்தில் உள்ள சிவசங்கரி, போட்டியின் மூன்றாவது சுற்றுக்கு செல்ல 11-4, 5-11, 4-11, 11-5, 11-6 என்ற புள்ளிகளைப் பதிவு செய்துள்ளதாக நிபுணத்துவ ஸ்குவாஷ் அசோசியேஷன் வலைத்தளம், www.psaworldtour.com தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், தற்போது அமெரிக்காவில் வசிக்கும் 22 வயதான அவர், உலக நம்பர் 2, எகிப்தின் நூரன் கோஹரை இன்று சந்திக்க உள்ளதால், கடுமையான சவாலை எதிர்கொள்வார்.

முதல் ஆட்டத்தில் நான் நன்றாக விளையாடினேன்.  ஆனால் இரண்டாவது மற்றும் மூன்றாவது ஆட்டத்தில் நிறைய பிழைகள் செய்தேன். நான்காவது ஆட்டத்திலிருந்து வெற்றி பெற வேண்டும் என்ற தாக்கம் எழுந்ததால் இறுதியாக வெற்றி வாய்ப்பினை அடைந்தேன் என்று சிவசங்கரி இணையதளத்தில் மேற்கோள் காட்டினார்.

அக்டோபர் 2019 இல் நடந்த பிஎஸ்ஏ மகளிர் உலக ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்பில், உலகின் முதல் 10 வீரர்களில் ஒருவரான அமண்டா சோபிக்கு எதிராக அவர் முதல் வெற்றியை எகிப்தில் பெற்ற கெடாவில் பிறந்த வீரரின் சாதனை மலேசியர்களுக்குப் பெருமை சேர்க்கும் வகையில் இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here