திங்கட்கிழமை (ஆகஸ்டு 9) முதல் போஸ் மலேசியாவில் (Pos Malaysia) சாலை வரி, ஓட்டுநர் உரிமங்களை புதுப்பிக்கலாம்

கோலாலம்பூர் : போஸ் மலேசியாவில் வரும் திங்கட்கிழமை (ஆகஸ்டு 9) முதல் முற்கூட்டிய நியமனம் மூலம் மலேசியாவிலுள்ள அனைத்து அஞ்சல் அலுவலகங்களிலும் (pos Malaysia )சாலை வரி மற்றும் ஓட்டுநர் உரிமங்கள் புதுப்பித்தல் மீண்டும் தொடங்கப்படும்.

www.pos.com.my அல்லது போஸ் மலேசியாவின் மொபைல் அப்ளிகேஷனில் www.pos.com.my அல்லது ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்டு 8) முதல் வாடிக்கையாளர்கள் தமது சந்திப்பை முன்பதிவு செய்ய முடியும் என்று போஸ் மலேசியா தெரிவித்துள்ளது.

“ஒரு வாடிக்கையாளர் ஒரு நாளைக்கு ஒரு சந்திப்பு இடத்தை மட்டுமே பதிவு செய்ய அனுமதிக்கப்படுகிறார் மற்றும் ஒரு சந்திப்பில் அதிகபட்சமாக மூன்று பரிவர்த்தனைகளை செய்ய அனுமதிக்கப்படுகிறார்” என்றும் அது சனிக்கிழமை (ஆகஸ்டு 7) ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

போஸ் மலேசியா தமது வாடிக்கையாளர்களுக்கு முகக்கவசம் அணிவது, உடல் வெப்பநிலையை பரிசோதித்தல், மைசெஜ்தேரா குறியீட்டை ஸ்கேன் செய்தல் மற்றும் வளாகத்தில் ஒரு மீட்டர் தனிநபர் இடைவெளி விதிமுறைகளை கடைபிடித்தல் மற்றும் அவர்கள் தமக்கு உடல்நிலை முடியவில்லை என்று உணர்கிறார்களானால் அவர்கள் வெளியிடங்களுக்கு செல்வதைத் தவிர்ப்பது போன்ற நிலையான இயக்க நடைமுறைகளை கடைபிடிக்குமாறு வாடிக்கையாளர்களை அது வலியுறுத்துகின்றது.

மேலும் வாடிக்கையாளர்கள் தங்கள் விசாரணைகள், கேள்விகளை www.pos.com.my இல் அல்லது அவர்களின் போஸ் மலேசியா மொபைல் அப்ளிகேஷன் மூலம் (AskPos) தெரிந்துகொள்ளவும் முடியும் என்றும் தெரிவித்துள்ளது.

– பெர்னாமா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here