மூளையில் இரத்தக் கசிவு; பிரபல பட்டிமன்றப் பேச்சாளர் பாரதி பாஸ்கர் மருத்துவமனையில் அனுமதி

சாலமன் பாப்பையா நடத்தும் பட்டிமன்ற நிகழ்ச்சிகளில் முக்கிய பேச்சாளராகத் தொடர்ந்து பேசிவருபவர் பாரதி பாஸ்கர். பட்டிமன்றத்தின் மூலம் உலகத் தமிழர்களிடையே புகழ்பெற்ற, இவர் உலகின் முன்னணி தனியார் வங்கியில் மிகப்பெரிய பொறுப்பில் பணியாற்றி வருகிறார். வங்கி பணிகளுக்கிடையே சாலமன் பாப்பையாவின் பட்டிமன்ற குழுவில் இணைந்து தொடர்ந்து பேசிவந்தார்.

சன் டிவியில் ஒளிபரப்பாகும் பட்டிமன்றதிற்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். அதிலும், ராஜாவும், பாரதி பாஸ்கரும் பேசுவதை பார்ப்பதற்கு பலரும் ஆவலுடன் இருப்பார்கள்.

இந்நிலையில் பாரதி பாஸ்கர் குறித்து, மிகவும் அதிர்ச்சியளிக்கும் வகையில் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. ஆம், பாரதி பாஸ்கருக்கு மூளையில் இரத்த கசிவு ஏற்பட்டுள்ளது.

இதனால், அவரை உடனடியாக அப்பலோ மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தற்போது பாரதி பாஸ்கருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

பாரதி பாஸ்கர் சீக்கிரமாக உடல் நலம்பெற்று வர அவரது ரசிகர்கள் நண்பர்கள் அனைவரும் பிரார்த்திப்பதோடு, சமூக வலைத்தளங்களிலும் அவருக்கு நம்பிக்கை கொடுக்கும் வார்த்தைகளை பகிர்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here