உலக பங்குச்சந்தை தரவரிசையில் 4வது இடம் ; அதிரடி காட்டும் இந்தியா

மும்பை:

லக பங்குச்சந்தையில் ஹாங்காங்கின் இடத்தை முதன்முறையாக இந்தியா பிடித்துள்ளது.

நாட்டின் வளர்ச்சி வாய்ப்புகளும் கொள்கை சீர்திருத்தங்களும் அதன் முதலீட்டுத் தகுதியை உயர்த்தியுள்ள நிலையில், இந்தியா இச்சாதனையை நிகழ்த்தியுள்ளது.

இந்திய பங்குச்சந்தை மதிப்பு 4.33 டிரில்லியன் அமெரிக்க டாலராக (S$5.8 டிரில்லியன்) அதிகரித்ததன் மூலம் 4.29 டிரில்லியன் அமெரிக்க டாலரில் இருந்த ஹாங்காங் பங்குச்சந்தையை அது பின்னுக்குத் தள்ளி நான்காவது இடத்திற்கு முன்னேறியதாகத் புளூம்பெர்க் நிறுவனம் திரட்டிய தரவுகளின்வழி தெரிவித்தது.

இந்திய பங்குச்சந்தை 4 டிரில்லியன் அமெரிக்க டாலர் வரம்பை முதல் முறையாக 2024ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதியன்று கடந்தது.

சீனாவின் மிகச் செல்வாக்குமிக்க, புத்தாக்கத் திறனுடைய நிறுவனங்கள் இடம்பெற்றுள்ள ஹாங்காங் பங்குச் சந்தை, வரலாறு காணாத அளவுக்குச் சரிவைச் சந்தித்துள்ள வேளையில், இந்திய பங்குச்சந்தை தொடர்ந்து முன்னேறி வருகிறது அதன் அசுர, அயாராத உழைப்பு மற்றும் வளர்ச்சியைக் காட்டுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here